போலிக் கடவுச் சீட்டை பயன்படுத்திய இலங்கையர் ஒருவரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உபாலி பஸ்நாயக்க என்ற இலங்கையர் பிரெஞ்சு கடவுச் சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி லண்டனில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு போலியான கடவுச் சீட்டை பயன்படுத்தி 2000மாம் ஆண்டு குறித்த நபர் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தமக்கு அரசியல் தஞ்சம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போலிக் கடவுச் சீட்டை பயன்படுத்திய குற்றத்திற்காக உபாலி பஸ்நாயக்கவிற்கு 200 நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், தண்டனையின் பின்னர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’