வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 செப்டம்பர், 2009

நான் வாழ்லும் தாய்லாந்தில் இன்னு பல அதிசயங்கள் எதிர்வரும் காலங்களில் தருவேன்தேள்களின் தோழன் சுவாங்!


தேள்களை வறுத்து விற்று பிழைத்துக்கொண்டிருந்த தாய்லாந்துக்காரர் ஒருவர் தேள்களின் தாயாக மாறிய கதை இது.

தாய்லாந்து நாட்டில் தேள், பூரான் போன்ற ஜந்துக்களை வறுத்துச் சாப்பிடுவது சகஜமான விஷயம். இந்த ஐட்டங்களை நன்றாக சமைத்துத் தர என்றே சின்ன சின்ன கடைகள் அங்கிருக்கும். 38 வயது சுவாங் புவாங்ஸ்ரீ கூட இப்படித்தான். தேள் வறுவல் கடை நடத்தி வந்தார். அதில் வந்த வருமானத்தில் தான் அவருடைய குடும்பம் பிழைத்து வந்தது.

புத்தரை வணங்கும் அவருக்கு திடீரென ஒரு ஞானோதயம் பிறந்தது. தேள்களை தன்னுடைய நண்பர்களாகக் கருதத் தொடங்கி, அவற்றுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். தாயைப் போல உணவெல்லாம் தருகிறார்.

என்னாச்சு, வில்லன்கள் எல்லாம் இப்படி நல்லவர்களாக மாறிவிட்டால் எப்படிங்க?

“அவற்றை வறுத்து விற்றதால் வந்த பணத்தில் நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். ஆனால் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. ஐயோ இப்படி ஒரு பாவத்தை செய்துகொண்டிருக்கிறோமே என்று. அவற்றை காயப்படுத்தியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று உண்மையில் நெகிழ்ந்துவிடும் சுவாங் தற்போது தான் வசித்து வரும் இரண்டடுக்கு வீட்டில் கீழ் அறையை தேள்களுக்கு என்றே ஒதுக்கிவிட்டார். அந்த அறையில் கிட்டத்தட்ட 4600 தேள்கள் இருப்பதாகச் சொல்கிறார்.

தேள்கள் இருக்கும் அறையை தேவையான காற்றுவசதியுடன் நன்றாக அடைத்து வைத்து விட்டாலும், இவர் நினைக்கும் நேரம் அங்கு சென்று தியானத்தில் உட்கார்கிறார். அப்போதுஅவர் உடல் முழுக்க தேள்கள் மொய்க்கின்றன. வாயில்கூட கொஞ்சம் நேரத்திற்கு அமர்ந்துவிட்டு திரும்புகின்றன.

இவருடைய தேள் தோழர்களைக் காப்பாற்ற தினசரி ஒரு கிலோ கிக்காடஸ் மற்றும் பிற பூச்சி யினங்களை வாங்கி வந்து தூவுகிறார் அந்த அறையில்.

இந்த தேளின் தோழன் கதை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவிட்டது. தன்னையும் தேள்களையும் காண வருபவர்களிடம் கல்லில் செய்யப்பட்ட சிறிய தவளை, ஆமை, எறும்பு மற்றும் புத்தர் சிலையை விற்று அவற்றில் வரும் வருமானத்தில் ஜீவனம் நடத்துகிறார். தேள்களை வறுத்து பிழைத்தபோது மாதம் 7 ஆயிரம் ரூபாய் வருமானம் வருமாம். ஆனால் தற்போது அது 3 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது.

“வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை. பிற ஜீவனைக் கொல்லவில்லை என்ற சந்தோஷமே போதும். எனக்கும் தேள்களைக் கண்டால் பயமில்லை. தொட்டு விளையாடும் அளவுக்கு அவை என்னையும் தோழியாக ஏற்றுக் கொண்டுவிட்டன” என்கிறார் சுவாங்ன் மனைவி லாம்பூம் பிம்டூம்.

சுவாங் தான் செய்த பாவத்தை கழுவும் விதமாக, ஓட்டல்களில் விற்பதற்கென்றே தேள்களை வளர்ப்பவர்களிடமிருந்து அவற்றை வாங்கிவந்து தன்னுடைய அறையில் கொண்டு வந்து விடுகிறார்.
தேள்களின் எண்ணிக்கை கூடுகையில் அவற்றில் இருந்து நூறுதேள்கள் வரை எடுத்துச் சென்று காட்டில் விட்டுவிடுகிறார்.

தேள்களை வளர்ப்பது என்பது தாய்லாந்தைப் பொறுத்தவரை புதிதல்ல என்றாலும் சுவாங்கின் இந்த தேள் பாசம் வித்தியாசமானது . முன்னதாக, இவ்வருடத் துவக்கத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி 5 ஆயிரம் தேள்களுடன் 33 நாட்கள் இருந்து சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் 7 இன்ச் நீளமுள்ள கொடுந்தேள் ஒன்றை தன்னுடைய நாக்கில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு வைத்திருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’