இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சிறார்கள் நல அமைப்பான யூனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு கூறியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் விமர்சித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள ஜேம்ஸ் எல்டர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வந்தார் என்று இலங்கை அரசு அவர் மீது குற்றம் சாட்டுகிறது.
இலங்கையில் போர் நடைபெற்ற நேரத்தில் அதில் சிக்கிய சிறார்களின் நிலைமை தொடர்பில், தொடர்ந்து ஊடகங்களுக்கு ஜேம்ஸ் எல்டர் தகவல்களை வழங்கி வந்தார்.
இலங்கையில் யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு எடுத்துள்ள முடிவு குறித்து ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பினர் செய்து வரும் பணிகள் குறித்தும் ஐ நா வின் தலைமைச் செயலர் தனது முழு நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் என்று ஐ நா வின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாரபட்சமற்ற முறையில்தான் ஐ நா பணியாற்றுகிறது
ஐ நா வின் சின்னம்இலங்கையிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஐ நா அமைப்பு அங்கு பாரபட்சமற்ற வகையில் பணியாற்றி வருகிறது. அதற்கு ஆதரவாக இலங்கை அரசு செயற்பட்டு ஐ நா வுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஐ நா விரும்புவதாகவும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.
விரைவாக கிடைக்கும் ஒரு தருணத்தில் இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தலைமைச் செயலர் எடுத்துச் சொல்வார் என்று. மே மாதம் தனது இலங்கை விஜயத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த பான் கீ மூன் தொடர்ந்து வலியுறுத்துவார் என்றும் ஐ நா வின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஐ நா அதிகாரி ஜேம்ஸ் எல்டர் அவர்களின் விசாக் காலாம் அடுத்த ஆண்டு வரை இருந்தாலும் அவர் இரு வாரங்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாடு தெரிவித்திருந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’