வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 செப்டம்பர், 2009

ஆப்கானியத் தேர்தல் பக்கசார்பற்ற வகையில் நடந்ததாக அதிபர் கூறுகிறார்


ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கார்சாய், அங்கு பக்கச் சார்பற்ற வகையில் தேர்தல்களை நடத்தியதாக நாட்டின் தேர்தல் ஆணையத்தை பாராட்டியிருக்கிறார்.
இந்த தேர்தலில் பரவலான மோசடி நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மோசடிகளை செய்ததாகப் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் கார்சாயின் ஆதரவாளர்களை நோக்கியே முன்வைக்கப்பட்டன.
தேர்தல் ஆணையம், மிக கடினமான சூழ்நிலைகளில் திறம்பட செயல்பட்டிருக்கிறது என்று கூறிய கார்சாய், தேர்தல் வழிமுறை ஆப்கானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
பிறிதொரு, ஐ.நா ஆதரவு பெற்ற, தேர்தல் புகார்கள் குறித்த ஆணையம், பல வாக்குகளை மீண்டும் பரிசீலிக்கவும், மறு வாக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’