வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 செப்டம்பர், 2009

கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ராகுல்காந்தி உறுதி


இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல்காந்தி மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ள காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாகர்கோவிலில் இன்று குமரி மாவட்ட மீனவ இளைஞர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ராகுல்காந்தி எம்.பி. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில் தமிழ்நாட்டிற்கு நேற்று 3 தினங்களாக சூறாவளி சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதன்போது குமரிமாவட்டத்தில் மீனவ இளைஞர் யுவதிகளை சந்தித்து பேசியபோது, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, இதுபோன்ற தொல்லைகள் குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்படுகிறது. எனவே இந்த 2 நாடுகளின் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரவையில் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’