வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 செப்டம்பர், 2009

இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது


மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் இந்த போட்டியின் தொடக்க ஆட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. இதில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் சங்கக்கரா தனது அணி முதலில் துடுப்பபாடும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தில்ஷன், ஜெயசூர்யா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.

நியூசிலாந்து அணி வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணறினார்கள். டேரல் டபி, ஷேன் பாண்ட், இயான் பட்லர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

தில்ஷன் (4 ஓட்டங்கள்), ஜெயவர்த்தனே (0), ஜெயசூர்யா (7)சங்கக்கரா (18 ஓட்டங்கள்) , கண்டம்பி (15 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதனால் இலங்கை அணி 69 ஓட்டங்கலுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேர்த்தியான பீல்டிங் காரணமாக 3-வது ஓவருக்கு பிறகு 26-வது ஓவர் வரை பவுண்டரி எதுவும் அடிக்க முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை எடுத்தது. குலசேகரா 6 ஓட்டங்களுக்கு, துஷாரா 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.நியூசிலாந்து அணி தரப்பில் ஷேன் பாண்ட் 3 விக்கெட்டும், இயான் பட்லர் 2 விக்கெட்டும், டேரல் டபி, வெட்டோரி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 217ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி, இலங்கை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.1 ஓவர்களில் 119 ஓட்டங்களை மட்டுமே பெற்றது இதனால் இலங்கை அணி 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’