-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
'சேனல் 4' வழியில் ஆதாரங்களை வெளிக்கொண்டுவருகிறது அல்ஜசீரா!
சிறிலங்கா அரசு கூறிக்கொண்ட, 'மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான மீட்பு யுத்தம் முடிவடைந்து விட்டது.'ஆனால் இன்னமும் தமிழ் மக்கள் துயரத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.இடம்பெயர்ந்த மக்களிற்காக அமைக்கப்பட்டவை நிவாரணக்கிராமங்கள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் உலகின் மிகப்பெரிய திறந்த வெளி சிறைகளாக காட்சி அளிக்கின்றன.இவற்றிற்கு விஜயம் மேற்கொண்ட, ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயமோ, முகாம்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க தவறிவிட்டது.'இவ்வாறு தொடங்குகிறது 'இடைத்தங்கல் முகாம்களை மீண்டும் அலசிப்பார்த்துள்ள அல்ஜசீராவின் வீடியோ தொகுப்பு. அண்மையில் சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்ற வீடியோ ஒன்றினை, பிரித்தானியாவின் சேனல் 4 ஊடகம் வெளியிட்டு, பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி, இன்று, சிறிலங்கா அரசு, அவ் ஊடகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யும் நிலைமை வரை கொண்டு வரப்பட்டு விடப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா வடக்கு இடைத்தங்கல் முகாம்களின் உண்மைநிலை பற்றி, 'அல்ஜசீரா' தொலைக்காட்சி, தனது தேடலின் ஊடாக, இக்காணொளித்தொகுப்பினை வெளியிட்டுள்ளது.இக்காணொளித்தொகுப்பில், முகாம்கள் பற்றி ஐ.நாவினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், முகாம்களின் சுகாதார நிலைமைகளில் நிலவும் பாரிய குறைபாடுகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகக்ள், முகாம்களை பராமரிக்கும் இராணுவத்தினரின் பாலியல் பலாத்கார நடவடிக்கைகள், இவற்றினால்பாதிக்கபப்ட்டவர்களின் நேரடி அனுபவங்கள், யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ஷெல் வீச்சு நடாத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான அனுபவங்கள், போன்றவற்றினை வெளிக்கொணறுகிறது அல்ஜசீரா.அத்துடன், இடைத்தங்கல் முகாம்களில் பணிபுரிந்த சர்வதேச தொண்டு நிறுவனப்பணியாளர் ஒருவரின் அனுபவங்களையும் இணைத்துள்ளது.இக்காணொளி காட்சிகளின் இறுதியில், அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தி - இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் திட்டத்துக்குள் மீள்குடியேற்றுவதாகவும், அவர்களுக்கான உரிமைகளை பாதுகாத்து, தமிழர்களுக்கான அரசியல் உரிமையினை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது அரசு.ஆனால் அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் குறைவடைந்துள்ள நிலையில், முகாம்களில் கிடைக்கப்பெறும் இவ் எதிர்மறையான விளைவுகள் பற்றி, சிறிலங்கா அரசாங்கமோ, சர்வதேச தொண்டு நிறுவனங்களோ இன்னமும் கொண்டுள்ள மௌனத்திற்கு விலைகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் முகாம் மக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’