வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 டிசம்பர், 2009

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி இசுறு பாடசாலையாக பிரகடனம். கல்வி அமைச்சர் தலைமையில் நிகழ்வுகள்.

நாடெங்கிலும் இசுறு பாடசாலைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்டத்தில் இசுறு பாடசாலைகளில் ஒன்றாக சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வுகள் இன்றையதினம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்லூரி அதிபர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்விச் சேவைகள் அமைச்சர் நிர்மல் கொத்தலாவல தகவல் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா பிரதிக்கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் ஆகியோரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோ வடமாகாண கல்விப் பணிப்பாளர் இராசையா யாழ். மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன் ஆகியோருடன் ஆசிரியர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கல்லூரி பாண்ட் அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்ட அதிதிகள் பாடசாலைக்குள் அமைந்துள்ள கோவிலில் பூஜை வழிபாடுகள் முடிவடைந்ததும் கூட்டம் நடைபெறும் வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூன்றரைக்கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை அதிதிகள் நாட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’