
அந்தக் கப்பலில் 30 இலங்கையர்கள் இருப்பதாக இரகசிய பொலிஸின் 'சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களை தடுப்பதற்கான பிரிவு' தகவல்களைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த இலங்கையர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கபெற்றுள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிஸாருடன் கூட்டாக இரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த இலங்கையர்களை ஏற்றிச்சென்ற கப்பல் கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் வைத்து அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் பிரவேசிக்க முற்பட்ட பல இலங்கையர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’