திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஜீன்ஸ் ஸ்டோல்டன்பேர்க்கின் தொழிற்கட்சி தலைமையிலான ஆளுங் கூட்டமைப்பு 169 பாராளுமன்ற ஆசனங்களில் 86 ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எண்ணெய் வளம் மிக்க ஸ்கண்டினேவிய நாட்டில் 16 வருட காலம் தொடர்ந்து நீடித்த அரசாங்கம் என்ற பெருமையை மேற்படி கூட்டமைப்பு அரசாங்கம் இடம்பெறுகிறது.
இந்நிலையில் இத்தேர்தலில் 83 ஆசனங்களை மத்திய வலதுசாரி கட்சிகள் பெற்றுள்ளன.2005 ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் பதவியிலிருக்கும் ஸ்டோல்டன்பேர்க், தனது வெற்றியானது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு நோர்வேக்கு வழிகாட்டுவதாக அமையும் என்று கூறினார்.
நோர்வேயின் 10 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா மற்றும் எரித்திரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகளாவர்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’