வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்க முடியாது - எம்.கே.நாராயணன்

mk_narayanan1தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்துள்ளார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன். அத்தகைய நிலையை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு அவர் நாட்டின் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநிலங்களின் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே நாராயணன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு நிதியை வழங்கி வந்தவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள். விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்க முடியாது.
விடுதலைப் புலிகளுக்கான நிதி வழங்கல் வழிகள் இன்னும் யாராலும் தொடப்படாமல் அப்படியே உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மனக்குறையுடன் இருக்கக்கூடிய சிலர் பயங்கரவாதக் குழு மீண்டும் ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் உதவி செய்வதற்காக ஒருங்கிணையக்கூடும்.
அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அத்துடன், எதனையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு நாராயணன் மேலும் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோவளம் கடற்கரையோர நட்சத்திர விடுதி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடிப் பேசி இருந்தார்கள் என புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்ததைத் தொடர்ந்து நாரயணனின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
கேரள கடல் வழியாக விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு ஊடுருவக்கூடும் என்ற அச்சம் காரணமாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’