வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

மன்னார் சாலையில் குறைந்தளவில் பஸ்கள் : போக்குவரத்துக்கள் தாமதம்

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் கடந்த 03 தினங்களாகப் போக்குவரத்துத் தேவைக்கு மிகவும் குறைந்தளவு பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
இதனால் உரிய நேரத்தில் தமது பயணங்களைத் தொடர முடியாதிருப்பதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மன்னார் பஸ் போக்குவரத்துச் சாலை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது-
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வன்னி மக்களை அழைத்துச் செல்வதற்காக மன்னார் சாலையைச் சேர்ந்த 05 பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இதனாலேயே பஸ்களுக்கு மன்னார் சாலையில் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.
இது போன்ற பயணத் தாமதங்கள் பயணிகளுக்கு இனிமேல் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’