தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அண்ணாவின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் முன் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் கருணாநிதி இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிலை அருகே நடந்து சென்றகருணாநிதிஅங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மலர் தூவினார். வள்ளுவர் கோட்ட பூங்காவில் கருணாநிதி மரக் கன்றும் நட்டார்.
அப்போது முதல்வரிடம் நிருபர்கள், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் உங்கள் செய்தி என்ன என்று கேட்டதற்கு,
"பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களையும், கொள்கைகளையும் உணர்ந்து கடைப்பிடித்து தமிழ்நாட்டு மக்கள் எல்லா உரிமைகளோடு வாழ்வதற்கும், அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து எடுத்துரைத்த மாநில சுயாட்சிக் கொள்கை வலுப்பெறுவதற்கும் குரல் கொடுப்போம்" என்றார்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’