வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
new லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
new லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 செப்டம்பர், 2009

முடி திருத்தும் தொழிலாளருக்கு புற்றுநோய் அபாயம்

Photobucketபுற்றுநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் நிறுவனத்திற்காக பணியாற்றிய ஆராய்ச்சியாளர்கள், தங்களின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிகை அலங்கார நிபுணர், அழகு கலை நிபுணர்கள் மற்றும் முடி திருத்துவோரை பாதிக்கும் நோய் அபாயங்கள் குறித்து, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், சிகை அலங்கார நிபுணர்கள் மற்றும் முடி திருத்துவோராக பணியாற்றும் ஆண்களுக்கு, பித்தப்பை புற்றுநோய் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது. முடிகளுக்கு பூசும் சாயத் தால், குறிப்பாக கருப்பு நிற சாயங்களால் இதுபோன்ற நோய் பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும், இதுபோன்ற சாயங்களால் கட்டாயமாக புற்றுநோய் பாதிப்பு ஏற் படும் என உறுதியாகக் கூற முடியாது. அதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமுடிக்கு பூசும் சாயங்களால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என, முன்பு சில சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது

மனித அறிவை மிஞ்சும் கணணி 2020ற்குள் வரும்

Photobucketமனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்., 'அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' (law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார்.

தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.

மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

லேப்டாப் தயாரிக்க மூங்கில் மரம் பயன்படுகிறது


பிளாஸ்டிக், உலோகத்திற்கு பதிலாக மூங்கிலை பயன்படுத்தி மடிக்கணினிகள் (லேப்டாப்) தயாரிக்க தைவான் நாட்டு கம்பயூட்டர் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய மூங்கில் மடிக்கணினியை உருவாக்கியுள்ள அசுஸ்டெக் நிறுவனம், அதற்கு அசுஸ் ஈகோ புக் (Asus Eco Book) என பெயரிட்டுள்ளது.

மடிக்கணினி திரை மற்றும் மைக்ரோ பிராசசரில் ஏற்படும் வெப்பத்தை தங்கக் கூடிய தன்மை மூங்கில்-க்கு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது முற்றிலுமான வெற்றியடைந்த பின்னரே வர்த்தக ரீதியாக மூங்கில் மடிக்கணினிகள் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் கணினி தொடர்பான உபகரணங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், மூங்கிலை கொண்டு மடிக்கணினி தயாரிக்கும் பணியை அசுஸ்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.