வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ltte லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ltte லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 நவம்பர், 2009

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ராம் அவர்களின் மாவீரர் தின உரை (ஓடியோ இணைப்பு)


மாவீரர் நாளான இன்று விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான ராம் அவர்களின் மாவீரர் தின உரை வெளியாகியுள்ளது.

இம் மாவீரர் தின உரை உத்தியோகபூர்வமானது என்பதையோ, இந்த உரை தளபதி ராம் அவர்களினால் தான் வாசிக்கப்பட்டது என்பதையோ, எங்கிருந்து அனுப்பபட்டுள்ளது என்பதையோ எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதனை உங்கள் பார்வைக்கு வெளிவிடுகின்றோம்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

மக்கள் பணத்தில் ஏப்பம்விடும் புலம்பெயர் புலிகள்..


ஈழவிடுதலை போராட்டம் என்று கூறி இளைஞர், யுவதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மதகுருமார், அரசியல் தலைவர்கள், சக விடுதலை அமைப்பு போராளிகள், தலைவர்கள் என தன் இனத்தவர் தனது அமைப்பு உறுப்பினர்கள் என்று கொலை செய்து சிங்கள அரசுக்கு மகிழ்ச்சி ஊட்டிய பிரபாகரனின் சொல்லை கேட்டு எதிரியிடம் மண்டியிடாமல், குண்டுகட்டி உயிரை மாய்த்த மறவர்கள், எதிரிக்கு ரகசியங்கள் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக சைனைற் அருந்தி தம் உயிரை மாய்த்தனர் திராவிட இளைஞர்கள். ஆனால், அந்த இளைஞர்களின் மரணத்தில் சுகபோகம் அனுபவித்த கேரளத்து மைந்தன் பிரபாகரன், மூன்று இலட்சம் மக்கள் முகவரியை துலைத்துவிட்ட நிலையில் முட்கம்பி வேலிக்குள் அவலப்படுகையில் தான் மட்டும் தனது கைத்துப்பாக்கி, சைனைற் குப்பி, செய்மதி தொலைபேசி அனைத்தையும் சிங்கள ராணுவத்திடம் கையளித்து சரணாகதி அடைந்தது மட்டுமல்லாமல், மண்டியிட்டு ஊயிர்பிச்சை கேட்டு இறுதியில் சிங்கள அரசபடைகளின் கோடாலி கொத்துக்கு இலக்காகி தன்னுயிரை ஈர்ந்தார்.

இது இப்படியிருக்க புலம்பபெயர் புலிகள் இறுதியுத்தம், அவசர நிதிசேகரிப்பு என்று தமிழர் நிலங்கள் மன்னாரில் தொடங்கி படிப்படியாக சிங்கள படைகளிடம் பறிபோய் கொண்டுள்ள நிலையிலும் தமது ஊண்டியல் வசூலிப்பை புலம்பெயர் புலிகள் கைவிடவில்லை. சிங்களபடையின் ஆக்கிரமிப்பை வீரம் செறிந்த புலிகள் வீரவரலாறு படைக்கின்றனர் என்று கூறி தமது ஊடகங்கள் வாயிலாகவும் முட்டாள்களாக்கி தமது இறுதிகட்ட வருவாய் வசூலிப்பை மூர்க்கத்தனமாக மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பிரான்ஸின் ஒவ வில்லியஸ் லாக்குறுனோ பகுதி புலிகளின் நிதி பொறுப்பாளர் ஏழாலை ரகுலேஸ் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களிடம் அவசரமாக சேர்த்த நிதியினை கொண்டு “லாக்குறுனோ” பகுதியில் பினாமி பெயரில் ஒர் திருமண மண்டபத்தை வாங்கி தனக்கு முதலீடாக்கியுள்ளார். இது தவிர இவருக்கு இரு வீடுகள் உள்ளன அவற்றில் ஒன்று தற்போது தனது சகோதரரின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளதுடன் மற்றைய வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு அரசு வழங்கும் வருமானம் குறைந்தவர்களுக்கான வீட்டில் வசித்து வருகின்றார்.

இவை மட்டுமா? இவரால் வசூலிக்கப்பட்ட பணத்தில் 90,000 யுரோ பணம் கந்து வட்டிக்கும் விட்டுள்ளார். இவற்றை அறிந்து கொண்ட நான் உட்பட மேலும் சிலர் இவர் வழங்கிய நிதி பற்றுசீட்டினையும் கொண்டு சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் தனது குண்டர்படையை (அடியாட்கள்) வைத்து மிரட்டி அனுப்பியள்ளார். இதனால் நாம் ஏமாற்றமடைந்துள்ளோம். தமிழீழம் ஒன்று கிடைக்கும் அதனை எமது தேசிய தலைவர் காலத்திலேயே பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் நாம் இந்த நிதியினை வழங்கினோம். ஆனால் எம்மிடம் சேகரிக்கப்பட்ட நிதியெதுவும் அங்கு செல்லவில்லை. இங்குள்ளவர்கள் அவற்றை தமது பொக்கற்றுக்குள் போட்டு கொண்டுள்ளனர். ஆதலால்தான் இவர்களால் இவ்வளவு தொகையில் சொத்துக்களை வைத்திருக்க முடிகின்றது.

இன்றுவரை அரசின் தயவில் தங்கிவாழும் இந்த குடும்பத்திற்கு இவ்வளவு சொத்துக்களை வாங்கிகொள்ள எங்கிருந்து பணம் வந்தது. இதனை அம்பலப்படுத்தி இந்த நிதிகள் அனைத்தும் முட்கம்பி வேலிகளுக்குள் வாழும் மக்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் பங்கீட்டு வழங்கவேண்டும் என்றும் இதற்கான அழுத்தத்தை பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தெருவுக்கு இறங்கி போராட்டம் நடாத்த முன்வர வேண்டும் இதற்கு அனைவரும் ஒன்றுதிரளவேண்டும். உங்களில் ஒருவனாக ஏமாந்துபோனவன் என்றவகையில் நானும் உங்களுடன் வீதிக்கு இறங்க தயாராகவுள்ளேன்.

தயவு செய்து இந்த மனகுமுறலை அனைத்து ஊடகங்களும், இணையத்தளங்களும் வெளிக்கொண்டுவர வேண்டும். அப்போதுதான் என்னைபோல் வருங்காலங்களில் மற்றையவர்கள் எமாறாது இருக்க முடியும். அதற்காகவே இந்த மடலை வரைகின்றேன். தயவு செய்து உங்களிடம் மன்றாட்டமாய் கேட்கின்றேன் இதனை அம்பலப்படுத்தி எனது இந்த முயற்சிக்கு உதவுங்கள்.

விடுதலையை கூறி பணம் சேகரித்த கொள்ளையர்களிடம் ஏமாந்துபோன தமிழன்… சுதன்

திங்கள், 19 அக்டோபர், 2009

ஆயுதங்கள் சில புதுக்குடியிருப்பில் கண்டெடுப்பு! // வில்பத்திலிருந்து புலிகளின் ஆயுதங்கள், உணவுப்பொருட்கள் மீட்பு!


வில்பத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என்பன வவுனியா பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆயுதங்கள், உணவுப்பொருட்கள் என்பன போர் நிறைவுக்கு வரமுன்னர் மன்னார் சிலாவத்துறை இராணுவ முகாமைத் தாக்குவதற்காக புலிகளால் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது. 25கிலோ எடையுடைய கிளைமோர் குண்டுகள், தகரத்திலடைக்கப்பட்ட உணவு, சீனி, குளுக்கோஸ், பிஸ்கட், மீன் ஆகியவையே இவ்வாறு தோண்டியெடுக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவத்திடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இது மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பின் இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பாளருக்கு உளவுப்பிரிவு அறிக்கைகள் கிடைத்ததையடுத்தே நேற்றுமுன்தினம் இரவு கண்டெடுக்கப் பட்டுள்ளது. 6.5கிலோ நிறையுடைய ஒருகிளைமோர் மற்றும் 1925 டெட்டனேட்டர்கள் என்பனவே இவ்வாறு கண்டெடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சனி, 3 அக்டோபர், 2009

புலிகளின் மகளிர் படையணி முக்கியஸ்தர் வவுனியாவில் குடும்பத்துடன் சரண்


புலிகளின் மகளிர் படையணி முக்கியஸ்தர் என்று கூறப்படும் யுவதியொருவர் தனது குடும்பத்தினருடன் வவுனியா பொலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பைமர் என்றழைக்கப்படும் டக்ளஸ் ஜெனீட்டா (வயது 22) என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மதவாச்சிக்;குளம், காளிகோவிலடியில் குடும்பத்தினருடன் வசித்துவந்த குறித்த யுவதி புலிகள் இயக்கத்தில் நீண்டகால உறுப்பினராக இருந்தவர் என்றும் யுத்தங்கள் பலவற்றில் ஈடுபட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ ரீ வி க்கு மூடு விழா ?


புலம் பெயர்ந்த மக்களிடம் தொலைக்காட்சி எனும் பேரில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கடை விரித்துள்ளன, புலிகளின் பாசிஷ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் உத்தியை வகுத்து தரிசனம், தென்றல் எனும் வரிசையில் இரண்டு வருட காலமாக ஜீரிவி தொலைக்காட்சி தனது வியாபாரத்தை நடத்தி வந்தது, இதற்கான செலவினங்களை விடுதலைப் புலிகளே பொறுப்பேற்று இருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன, இதனால் இலவசமாக புலிகளின் செயற்பாடுகளை அரங்கேற்ற ஜீரீவி நிர்வாகத்தால் முடிந்தது.

இருப்பினும் இதனை வியாபாரமாக மேற்கொண்டால் பல டொலர்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதில் முனைப்புக் கொண்ட நிர்வாகம் "தரணியெங்கும் தமிழொழி பரவிட" எனும் கோஷத்துடன் சந்தாதாரர்களைத் தேடத் தொடங்கியது, இத் தொலைக்காட்சியில் சந்தாவினைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஆட்டம் காணத் தொடங்கியது, இக்காலத்தில் ஸ்ரீலங்கா படையினர் விடுதலைப் புலிகளுக்கான சண்டையைத் தீவிரப்படுத்தி இருந்தனர், இதனால் சந்தா தேடும் படலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன் வன்னி யுத்தத்தில் சிக்குண்ட மக்களை விளம்பரக் காட்சியாக்கி புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்களின் ஆதரவை கண்ணீர்த் துளிகள் எனும் தொலைக்காட்சி நிகழ்வு மூலம் திரட்டத் தொடங்கினர், இதனால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஜீ ரீவியைப் பார்க்க உந்தப்பட்டனர், இதனை சாதகமாகப் பயன்படுத்த நினைத்த ஜீ ரீவி நிர்வாகம் மீண்டும் சந்தாதாரர்களையும், விளம்பரதாரர்களையும் தேட முற்பட்டனர், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கத் தவறியதால் மீண்டும் இலவச சேவையை நடாத்த முனைந்தனர்.

கேபி பத்மநாதனின் கைதுக்குப் பின்னர் ஜீ ரீவி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளினால் கிடைத்து வந்த நிதி முடக்கப்பட்டது, இதனால் தொலைக்காட்சியைத் தொடர்ந்து நடாத்த முடியாத நிலையில் இருக்கும் ஜீ ரீவி நிர்வாகம் இன்று தனது வழமையான நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு "வடம் பிடிப்போம்" எனும் முழு நாள் நிகழ்ச்சியின் மூலம் இனிமேல் இலவசமாக தொலைக்காட்சியை நடத்த இருப்பதாகவும் அதற்கான தொடர் ஆதரவைத் தருமாறு நேயர்களிடம் மூவர் சேர்ந்து இரத்தல் செய்கின்றார்கள், இதனால் கிடைக்கும் நிதியைக் பெற்றுக் கொண்டு தொலைக்காட்சிக்கு மூடு விழா நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன