WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH,
WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH, WILL POWER,
LOVING KINDNESS TO ACHIEVE HIS GOAL OF UNITED SRILANKA SWIFTLY AND EFFECTIVELY !
290 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சொனிக் ஏவுகணையை டிசம்பர் மாதம் ஏவி இந்தியா பரிசோதிக்கவுள்ளது.
கடலுக்கடியில் இந்த சோதனை நடத்தப்படும். இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்புதான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை. இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ ஆகிய இரு பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே 'பிரம்மோஸ்' என்பதாகும்.
நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்க பாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மத்தியில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.
பிரம்மோஸ் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களையும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் எனப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா சமீப காலமாக நீர் வழி படை பலத்தை பெருக்கி வருகிறது. அணுசக்தியில் இயங்கக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை சமீபத்தில் வடிவமைத்து, கடற்படையின் பலத்தை பெருக்கியது.
முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட போர் நீர்மூழ்கிக் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய கே-15 செளர்யா ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அடுத்த ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து அகுலா 2 ரக அணு நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் இந்தியக் கடற்படை மும்முரமாக உள்ளது.
இந்த வரிசையில் தற்போது பிரம்மோஸும் இணைகிறது. ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில், இந்த சோதனை நடைபெறும்.
பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே இராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது இதை விமானப்படையிலும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் பிரம்மோஸை ஏவும் பணிகளில் விமானப்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறை நிலையத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பு விபரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த வாரம் பீஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 கிராம மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் காவல்துறை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 150 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது
ஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார். வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை காணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 7 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 85 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை. நிவாரண, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் மாவட்டங்களை தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
துங்கபத்ரா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மந்த்ராலயம் குருராகவேந்திரர் கோயில் மூழ்கியது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள எமிக்கனூர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. அப்போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதுவது போல சென்றது. இதை பார்த்து மக்கள் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆபத்தை உணர்ந்த பைலட்கள் சட்டென மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை திருப்பினர். கட்டிடத்தின் மீது மோதாமல் ஹெலிகாப்டர் நூலிழையில் தப்பியது. இதனால் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.
கடந்த மாதம் 2-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இந்த சோகம் அடங்குவதற்குள் நாயுடு சென்ற ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் குடியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தர நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்கள், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், ‘இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள், முள்கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முதல்வர் கருணாநிதி 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
அதில், ‘திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பிக்கள் தந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவிலும் அகதிகள் பிரச்னை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘‘தமிழகத்தில் வசிக்கும் ஒரு லட்சம் இலங்கை அகதிகளுக்கு தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டும்’’, என்று கூறப்பட்டிருந்தது.
இதை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கடந்த 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கொடுத்தார்.
அப்போது பிரதமர், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கைக்கு குழு அனுப்புவது குறித்து பூர்வாங்க பேச்சு நடைபெறுவதாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் எம்பிக்கள் குழுவிடம் கூறினார். முதல்வரின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சோனியாவும் உறுதியளித்தார்.
மீனவர் மீதான தாக்குதல், அகதிகளின் புனர்வாழ்வு தொடர்பில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது-இந்தியப் பிரதமர்
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தும் இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறு வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியையும் கையளிப்பதற்காக திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமரை நேற்று சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டி.ஆர்.பாலு பிரதமரிடம் கடிதத்தை கையளித்த போது, இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளõர் என்று தி.மு.க. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு குழுவொன்றை அனுப்புவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும், பிரதமர் மன்மோஹன் சிங், பாலுவிடம் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை ஒரு முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடிதம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சந்தித்த பாலு, முதலமைச்சர் கருணாநிதியின் கடிதத்தையும் முப்பெரும் விழா தீர்மானத்தின் பிரதியையும் அவர்களிடம் கையளித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் தொடர்பில் மத்திய அரசாங்கம் விரைந்து செயற்படும் என்று சோனியா காந்தி, பாலுவிடம் உறுதியளித்தார். சிதம்பரம் கருத்து
இதேவேளை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய் யப்படுவதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். இலங்கை கடற் பரப்புக்குள் பிரவேசித்த இந்திய மீனவர்களை கைது செய்தல், தடுத்து வைத்தல் போன்ற சில நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அவர், அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நேற்று சென்னையில் பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்திலேயே இரண்டு மணிநேரம் தங்கியிருந்து கொழும்பு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, தனிப்பட்ட முறையிலான பயணமாக, கேரளா சென்றிருந்தார். தனது பயணத்தை முடித்து விட்டு, இலங்கை திரும்புவதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தார்.
அங்கே சந்திரிகாவிற்கு, விமான நிலையத்தின் அருகில், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் எதிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் என புலனாய்வு அறிக்கைகளினால், சென்னை விமான நிலையத்திலேயே இரண்டு மணிநேரம் காத்திருந்து, கொழும்பு புறப்பட்டார்.
இதேவேளை, கொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சந்திரிகா, தாம் ஆட்சியில் இருந்த போது முதலில் பேச்சுவார்த்தைக்கே முதலிடம் கொடுத்ததாகவும் யுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
சமூக மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கான முன்னெடுப்புகளை சுயாதீன குழுக்கள் மேற்கொள்ளலாம் என்றும அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஹிட்லரின் ஆட்சி நடைபெறுகிறது என்றும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் அமர்த்த மக்களைச் சந்திக்கத் தயாராகுங்கள் என்று தொண்டர்களுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், ”உலக வரலாற்றில் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக வளர்த்த பெருமைக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை குட்டிச்சுவராக்கி, தனது மகன்கள், மகள், பேரன் என தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் பதவிகளை அளித்து, அதை குடும்ப இயக்கமாக மாற்றிவிட்டார் கருணாநிதி.
பேறிஞர் அண்ணா தோற்றுவித்த இயக்கத்தை குடும்ப இயக்கமாக மாற்றி, அண்ணாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான வகையில் ஒரு கொடுங்கோல் ஆட்சியை, குடும்ப ஆட்சியை கருணாநிதி தமிழகத்தில் நடத்தி கொண்டிருக்கிறார்.
கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது. விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். தொழில்கள் தொய்வடைந்து உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் வேகமாக பெருகிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் நடைபெறுவது ஹிட்லரின் ஆட்சி.
அண்ணாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், தமிழரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தமிழர்களும், தமிழகமும் எழுச்சி பெறும் வகையில், புரட்சித் தலைவரின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலர நாம் அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் 101-வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்க, தமிழகம் அமைதிப் பூங்காவாக தழைத்தோங்க, மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ, கருணாநிதியின் கபட நாடகங்களை மக்களிடையே எடுத்துச் சென்று, குடும்ப ஆட்சியை வேரோடு ஒழித்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று எனது தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்.
நம்மை எதிர்த்துவரும் தடைகளை தகர்த்தெறிவோம். சோதனைகள் புதிதல்ல, அவற்றை சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம். பேறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் அமர்த்துவோம். மக்களைச் சந்திக்கத் தயாராகுங்கள். நாளைய தமிழகம் நமது கையில்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் அரசுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் காவல் துறை தலைவர்களின் மூன்று நாள் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், மாவோயிஸ்டுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்களது ஊடுருவல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள் வன்முறையை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வன்முறை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மாவோயிஸ்டுகள் பிரச்னையை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக கையாள முடியாது என்று கூறிய மன்மோகன்,அந்த அமைப்பினர் பல பகுதிகளிலுள்ள பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் ஆதரவை பெற்றுள்ளதாகவும், இவர்கள் சமூகத்த்தின் ஒரு அங்கமாகவும், இளைஞர்களாகவும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் மேம்பட மாநில சுயாட்சிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர் கருணாநிதி, நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன் மு.க.அழகிரி, தமிழக அமைச்சர்கள் அன்பழகன், பரிதி இளம்வழுதி, கனிமொழி எம்.பி., மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்புரையாற்றினார். இதைதொடர்ந்து, அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, அரியப் புகைப்படங்கள், பேச்சுக்கள், செய்திகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘அண்ணா 100′ என்ற இணையத் தளத்தை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அண்ணாவைப் பற்றிய சிறப்பு நூல்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பரிதி இளம்வழுதி பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் வெள்ளி நாணயத்தை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் முதல்வர் கருணாநிதி நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்த விழாவில் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலிலும் அறிஞர் அண்ணா நாணயமாக திகழ்ந்தார். தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் திராவிடர் கழகத்தில் இருந்து விலகியபோது, அந்த கழகத்தையே கைப்பற்றும்படி சிலர் அண்ணாவிடம் யோசனை கூறினர்.
ஆனால், தற்போது உள்ள திராவிடர் கழகமும், தான் துவங்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றிணைந்து, இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் செயல்படும் என்று அண்ணா கூறினார். அதன்படியே, இன்றும் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழமும் ஒன்றிணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்ணா கடைபிடித்த அரசியல் நாகரித்தை தி.மு.க.வும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட, மாநில சுயாட்சிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதற்கு பிரணாப் முகர்ஜி போன்ற அறிவாற்றல் நிரம்பிய தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசுகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு மாநிலமும் சம அதிகாரம் பெற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும்; தேசிய ஒருமைப்பாடு உருவாகும்.
நாங்கள் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல; எல்லா மொழிக்கும் நண்பர்கள். எல்லா மொழியையும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எங்கள் மொழிக்கு உரிய இடம் மத்திய அரசில் இருக்க வேண்டும்.
நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்களின் போது கூட, இந்தி ஒழிக என்று சொல்லவில்லை. கட்டாய இந்தி ஒழிக என்று தான் சொன்னோம். சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் போற்றிட இந்த அண்ணா பிறந்தநாளில் சூளுரைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகள், இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தியாளர் திசநாயகத்துக்கு இலங்கை நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து ‘சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை’ எனும் தலைப்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கண்டனக் கூட்டத்தில், திசநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை உடனடியாக ரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும், சிங்கள அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும் இந்தியாவின் முன்னணி செய்தியாளர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்ச்செல்வம் பேசியதாவது:
இலங்கையின் இன்றைய நீதித்துறையில் முற்போக்காளராக தோற்றமளிக்கும் சரத் என் சில்வா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதுதான் இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவித்தார்.
நீதித்துறையும் சர்வாதிகார இலங்கை அரசும் இணைந்து பயணித்து வந்ததன் விளைவே திசநாயகம் கைது. நாம் எல்லாம் திசநாயகத்துக்காய் குரல் எழுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் இது குறித்து அக்கறையற்றவர்களாக இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை என்றார். ‘ஹெட்லைன்ஸ் டுடே’ தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம் பேசியதாவது:
இலங்கை போராட்டங்களை நாம் காந்தீய வழிகளில் முன்னெடுக்க முடியும். நாம் ‘ஏர் லங்கா’ அலுவலத்தில் போய் அங்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கொடுக்கிற பணத்தில் பெரும்பங்கு போருக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே ‘ஏர் லங்கா’வில் பயணம் செய்யாமல் வேறு வானூர்தி சேவைகளை நாடுங்கள் என்று இலங்கையில் வர்த்தக நலன்களை பாதிக்கிற அளவுக்கு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இன்றைய இலங்கை அரசு இனி ஈழ மக்கள் எழ மாட்டார்கள் என நினைக்கிறது. நான் அங்கே எஞ்சியுள்ள போராளிகளோடும் தமிழ் மக்களோடும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் தங்கள் மக்கள் கொல்லப்படுவதையும் முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதையும் இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைகள் மீண்டும் ஒரு ஈழப் போரை அந்த மண்ணில் உருவாக்கும் என்பது அந்த மக்களிடம் பேசிய மன நிலையிலிருந்து தெரிகிறது.
இந்திய அரசைப் பொறுத்தவரையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எழுந்த நெருக்கடிகளுக்காக, நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லி விட்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு போரை முட்டுக்கொடுத்தும் நடத்தியதும் இந்தியாதான்.
திசநாயகம் கைதுக்காக மட்டுமல்ல ஒரு பெரிய போராட்டத்தையே இன்று நாம் ஜனநாயகத்துக்காய் நடத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என்றார்.
‘தி வீக்’ இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன்:
இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவற்றுக்கு மதிப்பளிக்கும் மனநிலையில் ஆளும் தரப்பில்லை.
ஆனால் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்கிற சூழலில் ஏதோ சாதித்து முடித்து விட்ட மாதிரி இங்கே அமைதியாக இருக்கிறார்கள்.
என்னதான் நாம் பேசினாலும் எழுதினாலும் தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லை என்றால் இலங்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. மக்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராட முன்வரவேண்டும் என்றார்.
மூத்த எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான தேவசகாயம் பேசிகையில்,
தென் ஆபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகளைக் கொண்டுவந்த போதும் தென் ஆபிரிக்கா அசைந்து கொடுக்கவில்லை.
ஆனால், அனைத்துலக விளையாட்டுக்கள் எதையும் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கிற வரை தென் ஆபிரிக்காவில் நடத்தப் போவதில்லை என்று உலக நாடுகள் முடிவு எடுத்த பின்புதான் அது தன் நிறவெறிக் கொள்கையை மறு பரீசிலனை செய்தது.
அதுபோல இலங்கையில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறா வண்ணம் நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு நாம் காட்டும் எதிர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றார். ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டின் செய்தியாளர் பீர் முகம்மது பேசுகையில்,
அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் எலின் சாண்டஸ் இலங்கையில் உள்ள முகாம்களை ஜெர்மனியின் நாஜி முகாம்களோடு ஒப்பிட்டுள்ளார்.
அவர் வரும் 15 ஆம் நாள் தொடங்கி 20 ஆம் நாள் வரை இனப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.
இதற்காக அவர் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகத்தில் விசாவும் பெற்றிருந்தார். ஆனால் தனது பிரச்சார பயணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு பத்து நாட்களாக அதற்கான காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதோடு இந்த பத்து நாட்களில் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருந்த விசாவை ரத்தும் செய்து விட்டது.
இதிலிருந்து தமிழ்நாட்டு காவல்துறையும் இந்திய உளவுத்துறையும் எப்படியெல்லாம் ஈழ மக்களுக்காக இங்கே பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இங்கே இருக்கிற மாநில முதல்வரோ அங்கே சுமுகநிலை நிலவுகிறது என்கிறார். இது வேதனையான பேச்சு என்றார். ‘நக்கீரன்’ இதழின் உதவி ஆசிரியர் லெனின் பேசுகையில்,
போர் நடந்தபோது தமிழ் ஊடகவியலாளர்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடினார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார்கள்.
உண்மையில் அவர்கள் நினைத்திருந்தல் இலங்கை விவகாரத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில ஊடகவிலாளர்கள் இன்னும் அதிக கவனம் எடுத்து இலங்கை விவகாரத்தில் செயல்பட வேண்டும் என்றார். கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில்,
இலங்கையில் உண்மைக்காக பேசிய ஊடகவியளார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் உண்மை பேசக்கூடாது என்பதற்காக இலங்கை தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.
போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்களுக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்து விட்டார்கள். பல நேரங்களில் இதை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.
தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இப்படி என்றால்… ஆங்கில ஊடகங்களோ தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது ஒரு போரையே தொடுத்தன.
இலங்கை அங்கே தமிழர்களைக் கொன்றார்கள். இங்குள்ள ஆங்கில ஊடகவியளார்களோ போரின் முடிவை பெரும் வெற்றியாக கொண்டாடினார்கள்.
ஆனாலும் இலங்கை அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகப் பேசவும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிற மன நிம்மதி இருக்கிறது என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்துள்ளார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன். அத்தகைய நிலையை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு அவர் நாட்டின் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநிலங்களின் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே நாராயணன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு நிதியை வழங்கி வந்தவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள். விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருமுறை தலைதூக்குவார்கள் என்பதை மறுக்க முடியாது.
விடுதலைப் புலிகளுக்கான நிதி வழங்கல் வழிகள் இன்னும் யாராலும் தொடப்படாமல் அப்படியே உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மனக்குறையுடன் இருக்கக்கூடிய சிலர் பயங்கரவாதக் குழு மீண்டும் ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் உதவி செய்வதற்காக ஒருங்கிணையக்கூடும்.
அந்த மாதிரியான ஏதாவது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அத்துடன், எதனையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு நாராயணன் மேலும் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோவளம் கடற்கரையோர நட்சத்திர விடுதி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடிப் பேசி இருந்தார்கள் என புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்ததைத் தொடர்ந்து நாரயணனின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
கேரள கடல் வழியாக விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு ஊடுருவக்கூடும் என்ற அச்சம் காரணமாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- அறிஞர் அண்ணாவின் 101ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அண்ணாவின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் முன் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் கருணாநிதி இன்று காலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிலை அருகே நடந்து சென்றகருணாநிதிஅங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மலர் தூவினார். வள்ளுவர் கோட்ட பூங்காவில் கருணாநிதி மரக் கன்றும் நட்டார்.
அப்போது முதல்வரிடம் நிருபர்கள், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் உங்கள் செய்தி என்ன என்று கேட்டதற்கு,
"பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களையும், கொள்கைகளையும் உணர்ந்து கடைப்பிடித்து தமிழ்நாட்டு மக்கள் எல்லா உரிமைகளோடு வாழ்வதற்கும், அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து எடுத்துரைத்த மாநில சுயாட்சிக் கொள்கை வலுப்பெறுவதற்கும் குரல் கொடுப்போம்" என்றார்.