வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 பிப்ரவரி, 2010

அஜீத்துக்கு விஜய் ஆதரவு .. எரிந்து விழுந்த குகநாதன்!


அஜீத் விவகாரத்தில் பெப்ஸி கடுமையான முடிவுகளை எடுத்தபோது அஜீத் துக்காக சினிமா உலகில் பரிந்து பேசிய ஒரே நட்சத்திரம் சூப்பர் ஸ்டார்தான்.

ஆனால் அவருக்கும் பெப்ஸி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவிட, இன்னொரு நட்சத்திரம் யாரும் எதிர்பாராத வகையில் இதில் தலையிட்டுள்ளார்.

அவர் விஜய் . தொழில் ரீதியாக அஜீத்துக்கு எதிரானவராக விஜய் சித்தரிக்கப்பட்டாலும் திரைக்கு வெளியே இருவரும் நட்பு பாராட்டிக் கொள்வது தொடர்கிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரு குடும்பத்தினரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர்.

அந்த பாசத்தில், விசி குகநாதனைத் தொடர்பு கொண்ட விஜய், "அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தர வேண்டாம்..." என்று கேட்டுக் கொண்டாராம்.

மேலும் கடந்த புத்தாண்டு பார்ட்டியின்போது, நடிப்பை சில ஆண்டுகளில் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என அஜீத் சொன்னாராம் விஜய்யிடம்.

அதனைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், அவர் பீல்டில் இருக்கும் வரை கஷ்டப்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் இதில் கடும் கோபமடைந்த குகநாதன், அவரை யார் நடிக்கச் சொன்னது.. விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என்ற ரேஞ்சுக்குப் பேசிவிட்டதாக கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.

ரொம்பத்தான் கோபமாக இருக்கிறார்கள் போல..!

சனி, 19 டிசம்பர், 2009

100 நாள் ஓடுமா? விஜய் பயம்!


இதுவரை இல்லாத புது விஜய்யை பார்க்க முடிகிறது இப்போது. வேறொன்றுமில்லை, பயம்! விஜய் படங்கள் ரிலீஸ் ஆன பிறகும் அவரைத் தொடர்புகொண்டு படம் குறித்து விவாதிக்க முடியாத அளவுக்குத் தொலை தூரத்தில் இருப்பவர், இப்போது கொஞ்சம் நெருக்கம் காட்டுகிறார் பத்திரிகையாளர்களிடம்.

வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன முதல் நாளே முன்னணி பத்திரிகையாளர்கள் சிலருக்கு விஜய்க்கு நெருக்கமானவர்கள் போன் அடித்தார்கள். படம் எப்படியிருக்கு, 100 நாள் ஓடுமா என்றெல்லாம் விசாரிப்பு. தானே போன் செய்தால் சரியான ரிசல்ட் கிடைக்காது என்பதால் இந்த நெருக்கமானவர்களை விட்டு விசாரித்தார் போலிருக்கிறது. வெளிப்படையாகக் கருத்துக் கூறினார்களாம் சில பத்திரிகையாளர்களும்.

இன்னொரு தகவலும் ஆச்சர்யத்தைத் தருகிறது. அவதார் போட்டிக்கு வந்துவிட்டதல்லவா? படம் போணியானால் போதும் என்ற முடிவில் கண்ட தியேட்டருக்கும் படத்தைக் கொடுத்துவிட்டார்களாம். திருச்சி அருகே உள்ள ஒரு சிற்றூரில் டூரிங் டாக்கீசில் வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒரு பெரிய நடிகரின் படம் டுரிங் டாக்கீசில் ரிலீஸ் ஆவது 75 ஆண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத விஷயம் என்கிறார்கள்.

வியாழன், 10 செப்டம்பர், 2009

காங்.கில் ரஜினியும் இணையலாம்; இளைஞர் காங்.கில் விஜய்க்கு இடமில்லை-ராகுல்


சென்னை: நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: விஜய் உங்களை சந்தித்து பேசினாரே. அவர் காங்கிரஸில் இணைகிறாரா?

ராகுல்: நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியின்பால் ஆர்வம் கொண்டு எனது சகா ஜிதேந்தரை தொடர்பு கொண்டு பேசினார். அது ஒரு சம்பிரதாயமான, நட்புரீதியான சந்திப்புதான். காங்கிரஸ் கட்சியில் அவர் சேருவது பற்றி நாங்கள் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியில் அயோக்கியர்கள், மோசடி பேர்வழிகள், கடத்தல்காரர்கள் போன்றவர்களை தவிர யார் வேண்டுமானாலும் சேரலாம். நடிகர் விஜய்யும் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்போம். ஆனால், 35 வயதை தாண்டியவர் என்பதால், இளைஞர் காங்கிரசில் அவருக்கு வாய்ப்பு இல்லை.

இளைஞர் காங்கிரசில் தலைவராக இதுவரை இளைஞர்கள் இருந்தது இல்லை. 39 வயதை தாண்டிய நானும் இளைஞர் அல்ல. நான் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர் அல்ல என்றாலும் அதை வலுப்படுத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

ரஜினியும் வரலாம்..

நடிகர் ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்வோம். அவரை வரவேற்க தயாராக இருக்கிறோம்.

கேள்வி: நாட்டின் இளம் பிரதமராக நீங்கள் வருவீர்களா?

ராகுல்: நமக்கு ஒரு பிரதமர் (மன்மோகன் சிங்) இருக்கிறார். அவர் சிந்தனையில் இளையவர்தான்.

கேள்வி: உங்கள் காதல், காதலி, திருமணம் பற்றி?

ராகுல்: நீங்கள்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒவ்வொரு காதலியை உருவாக்குகிறீர்கள் (சிரிக்கிறார்). திருமணத்தைப் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இனிமேல்தான் அதுபற்றி சிந்திக்க வேண்டும்.

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரசும் சோனியாவும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

ராகுல்: இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

இலங்கை பிரச்சினையில் மற்ற நாடுகள் தலையிட்ட அளவுக்கு இந்தியா தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இந்தியா முதலில் தலையிட்ட பிறகுதான், மற்ற நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டன. காங்கிரஸ் கட்சியும், எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி, தாய் சோனியா காந்தி ஆகியோரும் இலங்கை தமிழர்களுக்காக அதிக அக்கறை செலுத்தி உள்ளனர்.

நானும் இந்த பிரச்சனையில் அக்கறை காட்டாமல் இருந்தது இல்லை. அப்படி இருந்திருந்தால் மதுரையில் எனக்கு இந்த அளவுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்க மாட்டார்கள். வயதான பெண்கள் கூட நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். எனவே இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் மீது தமிழ்நாட்டில் தவறான கருத்து இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

கேள்வி: திமுக-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது?

ராகுல்: திமுகவுடன் காங்கிரசுக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. அனுபவமிக்க மூத்த தலைவரான டாக்டர் கலைஞர் கருணாநிதியை நான் பெரிதும் மதிக்கிறேன்.

பேட்டியின்போது விடுதலைப் புலிகள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.

கோவையில் ராகுலுக்கு கறுப்பு கொடி-17 பேர் கைது:

இந் நிலையில் இன்று கோயம்புத்தூர் வந்த ராகுல் காந்தி க்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் நீதிமன்றம் முன்பாக ராகுலுக்கு எதிராக தமிழ் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதே போல ராகுலுக்கு மதுரையிலும், விழுப்புரத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு அவர் டெல்லி திரும்புகிறார்.