-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 18 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 16 அக்டோபர், 2009
ராமனாக இருந்தாலும் இலங்கை வரை சென்று.....:விஜயகாந்த்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
’’அநியாயத்தை எதிர்த்து, போரிட்டு வெற்றி பெற்றால்தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும். ராமனாக இருந்தாலும், இலங்கை வரை சென்று ராவணனை போரிட்டுதான் சீதையை மீட்க முடிந்தது. அதைப்போல தீய சக்திகளை ஒழிக்க நல்லவர்கள் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும். இருளை அகற்ற தீபத்தை ஏற்ற வேண்டும். அதுவே தீபாவளி நமக்கு தரும் பாடமாகும்.
எல்லோரும் இன்ப வாழ்வு பெற்றிட நல்ல காலம் பிறக்கட்டும் இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
வியாழன், 15 அக்டோபர், 2009
தமிழர் இறந்தால் என்ன? இந்திய-இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்ற நினைப்போ? : விஜயகாந்த் கேள்வி
திமுக காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த சில மணிநேரங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
"தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் அங்குள்ள தமிழர்களுக்கு எதுவித நன்மையும் கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு, நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.
இந்தப் பயணம் ராஜபக்ஷவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமக்குத் தாமே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபக்ஷ இதை பயன்படுத்திக் கொள்வார்.
மாணவர்கள் கேள்வி
"இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டமைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் பழிவாங்கப்பட்டு விட்டனர்.
இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்" என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும் என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.
"எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும்" என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது அதை அன்று சீரழித்தவர் இதே கருணாநிதிதான்.
பிரித்தாளும் சூழ்ச்சி
இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.
நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால் இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு?
பேராபத்தில் தமிழர்கள் இருந்தபோது, இந்திய அரசு, மௌனம் சாதிப்பது யாருக்காக? இந்த அரசு எவருக்காக செயற்படுகிறது என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை இந்திய - இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சனி, 10 அக்டோபர், 2009
‘திமுக’ இலங்கை பயணம் : உருப்படியான பயணம் அல்ல - விஜயகாந்த்
இலங்கைக்கு திமுக தலைமையிலான குழுவை அனுப்புவது கபட நாடகம் என்று கடுமையாக சாடியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.திருச்சி வந்த அவர் அங்கு பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் 80 ஏழைப் பெண் குழந்தைகளுக்குத் தலா ரூ. 10,000 நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றேன். பிரதமரை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலுவுக்கு மட்டும் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
தமிழக நலன்களை கூறு போட்டு விட்டனர்…
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, கச்சத்தீவு தாரை வார்ப்பு என தமிழகத்தின் நலன்கள் எல்லாம் கூறுபோடப்பட்டு விட்டன.
இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என எம்.பி.க்கள் மனு கொடுக்கலாம். ஆனால் மத்திய உள்துறை அமைச்சரே பிரதமரிடம் மனு கொடுக்கிறார் என்றால் யாரை ஏமாற்ற இந்த வேலை? இலங்கைக்கு எம்.பிக்கள் குழுவை அனுப்புவது கபட நாடகம். அந்த குழுவில் எங்களை அழைத்தாலும் நாங்கள் செல்ல மாட்டோம் என்றார்.
பா.ம.க. தலைமையில் 3-வது அணி அமைக்க போவதாக டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றார் விஜயகாந்த்.
மேலும் கூட்டணி குறித்து கேட்ட கேள்விக்கு, தேர்தல் வரட்டும் பார்க்கலாம். இப்போதே அது பற்றிய யூகம், வதந்திகளுக்கு எல்லாம் பதில் தேவை இல்லை.
கூட்டணி அமைத்து மற்ற கட்சிகளுக்கு உழைக்க தேமுதிக தயாராக இல்லை.
தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்வோம் தமிழகத்தில் தேமுதிக தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
விருத்தாசலத்தில்..
இந் நிலையில் விருத்தாச்சலம் தொகுதிக்கு இன்று சென்ற விஜயகாந்த் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விருத்தாசலம் தொகுதியை தமிழக அரசு தொடர்ந்து புறகணித்து வருகிறது. பெரிய அளவிலான நலத் திட்டங்களோ, அரசு திட்டங்களோ இந்த தொகுதில் செயல்படுத்தவில்லை.
இத்தொகுதியில் என்னுடைய எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து தான் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலை சீரமைப்பு மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படுகிறது.
தமிழக எம்பிக்கள் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து உண்மை கண்டறிய இலங்கைக்கு இன்று செல்வதாக கூறுகிறார்கள். இது வெறும் நாடகம் தான். இவர்கள் இலங்கைக்கு சென்று வந்தவுடன் வணங்காமுடி கப்பலில் இருந்து நிவாரண பொருட்கள் இறக்கி விட்டார்கள் என்று எப்படி பொய் சொல்லப்பட்டதோ அதே பொய்யை தான் இவர்களும் கூறுவார்கள். இந்த பயணம் உருப்படியான பயணம் அல்ல.
முல்லை பெரியார் அணை பிரச்சனை விவகாரத்தில் திமுக தொடர்ந்து கபட நாடகம் நடத்தி வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதும் ஒர் நாடகம் தான்.
எதற்கெடுத்தாலும் கோர்ட் உத்தரவு என்று கூறுகிறார்கள். இதே முல்லை பெரியார் அணையில் 6 அடி உயர்த்தி கொள்ளலாம் என்ற கோர்ட் உத்தரவை ஏன் இவர்கள் முதலில் பின் பற்றவில்லை.
தேமுதிக சார்பில் பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்த பெண் குழந்தைகள் 500 பேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காப்பீடு வழங்கி வருகிறோம். இது போன்ற பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார் விஜயகாந்த் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












