வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வவுனியா பூந்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வவுனியா பூந்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 பிப்ரவரி, 2011

வவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு

வுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதாக அங்கு தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

வவுனியா வாகன விபத்தில் இளைஞர் பலி

வுனியா பொலிஸ் பிரிவிலுள்ள பூந்தோட்டம் குடியிருப்பு வீதியின் தென்னைமர தோட்ட சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

திங்கள், 12 ஜூலை, 2010

புலிகள் அமைப்பின் 68 முன்னாள் போராளிகள் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு

வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரி புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த முன்னாள் 68 போராளிகள் இன்று விடுவிக்கப்பட்டு அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

புதன், 30 டிசம்பர், 2009

வவுனியா, பூந்தோட்டத்தில் சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நிகழ்வு- (புகைப்படங்கள் இணைப்பு)

new-phots-0151வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையினரும், வவுனியா நகரசபையினரும் இணைந்து கடந்த 26ம் திகதி சுனாமி அனர்த்த 5ம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வினை நடத்தியிருந்தனர்.. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், உபதலைவர் எம்.எம்.ரதன், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி), நகரசபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட அரஅதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரைகளையும் ஆற்றியிருந்தனர்.
வன்னி நிலப்பரப்பில் புலிகள் கண்ணிவெடிகளை விநோதமான முறையில் புதைத்திருக்கிறார்கள் என்று கண்ணிவெடி அகற்றம் சுவிஸ் நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழமையாக கண்ணிவெடிகளைப் புதைக்க ஒரு வியூகம் இருப்பதாகவும் ஆனால் அதனை பின்பற்றாமல் புலிகள் வினோதமான முறையிலும் கண்ணிவெடிகள் எங்கு இருக்கலாம் என்று சற்றம் ஊகிக்க முடியாத இடத்திலும் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வன்னியில் பெரியதம்பனை முதல் பண்டிவிரிச்சான் வரை கண்ணிவெடிகளை தாம்; அகற்றி இருப்பதாக தெரிவித்துள்ளனர். குரோவேசியா தயாரிப்பான தானியங்கி இயந்திரத்தைக் கொண்டு கண்ணிவெடிகளை முன்நாள் இந்தியப் படையதிகாரி ஒருவர் அகற்றி வருகின்றார் இவர் சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிகிறார் அவர் மேலும் தெரிவிக்கையில் புலிகள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்ளும் கவசவாகனங்களை தாக்கியழிக்கும் கண்ணிவெடிகளை புதைத்திருப்பதாக தெரிவித்தார். வடகிழக்கில் சுமார் 1லட்சத்து 50ஆயிரம் கண்ணிவெடிகளை புதைக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தினர் புதைத்த கண்ணிவெடிகளும் உள்ளடங்கும் இதுவரை சுமார் 4589 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக கூறுகிறார்.

new-phots-0041new-phots-0051new-phots-0071new-phots-0081new-phots-0101new-phots-0111new-phots-0211new-phots-0151