-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
திங்கள், 5 அக்டோபர், 2009
முதன்முறையாக சுவிஸ் புலிகளிடையே நேரடிக் கைகலப்பு! அம்பலத்திற்கு வரும் அந்தரங்கங்கள்!!
புலிகளின் புதிய தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்தியிருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதனின் ஆதரவாளரான இதுவரை காலமும் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளைக்குப் பொறுப்பாளராக செயற்பட்டு வந்த குலம் மற்றும் அவரது ஆதரவாளராக இயங்கிவந்த புலிகளின் சூரிச் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயம் உள்ளிட்ட குழுவினருக்கும், புலிகள் அமைப்புக்கு தானே தலைவரென இரகசியமாகப் பிரகடனப்படுத்தி நோர்வேயிலிருந்து செயற்படும் நெடியவனின் ஆதரவாளர்களான புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை நிதிப் பொறுப்பாளர்களான அப்துல்லா, மாம்பழம், லவுசான் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு அல்லது கவிதாஸ் குழுவினருக்குமிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவமானது 30.09.09 புதன்கிழமை மாலை சூரிச் மாவட்டத்திலுள்ள ஜோசெப் ஸ்ராசாவிலுள்ள புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. புலிகளின் மேற்படி தலைமைக் காரியாலயம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அதனை மூடிய தினமான 30.09.09 புதன்கிழமை மாலை அதனைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போதே மேற்படி மோதல் சம்பவித்துள்ளதென்றும் தெரிய வந்துள்ளது. இதன்போது மக்களிடம் புலிகளுக்காக வசூலிக்கப்படும் நிதி, புலிகளுக்காக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான கணக்கு விபரங்கள் கோரப்பட்டமை மற்றும் மாவீரர்தின நிகழ்வின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்ற விடயங்களே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறுவதற்கு காரணமாக இருந்துள்ளன.மேற்படி வாக்குவாதம் நெடியவன் தரப்புக்கும் கே.பியின் குலம் தரப்புக்குமிடையில் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி புலிகளின் சுவிஸ் (முன்னாள்) கிளைப் பொறுப்பாளரான குலம் உள்ளிட்ட அவரது தரப்பினரின் சட்டைகள் கிழிந்து போகும் அளவுக்கு மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருதரப்புக்கும் பொதுவான நிலைப்பாட்டில் இருந்த சிலர் இடையில் புகுந்து கைகலப்பை நிறுத்தி இருதரப்பையும் அப்புறப்படுத்தி உள்ளனர். இது தொடர்பில் இருதரப்பிடமும் நாம் தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தோம்,
இதில் முதலாவதாக, நெடியவன் தரப்பைச் சேர்ந்த அப்துல்லா, மாம்பழம் லவுசான் கவிதாஸ் உள்ளிட்டவர்களைச் சேர்ந்தவர்களிடம் சம்பவம் பற்றிக் கேட்டபோது, தலைவர் பிரபாகரன் மக்களின் விடிவெள்ளியாவார். அவர் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமுமாவார். அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர் இறந்து விட்டார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டிய தேவையும் எமக்கில்லை. இவ்விடயத்தில் மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்தக் கூடாது. இது குறித்து நாம் வாதிட்ட போதே குலம் தரப்பினர் இதனை ஏற்றுக் கொள்ளாமையால் எமக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டது. அத்துடன் விடுதலைப் போராட்டமானது ஏதோவொரு வகையில் தொடருமென்பதனால் நாம் கணக்கு வழக்கு உட்பட மேற்படி விடயங்களை தற்போதைக்கு யாரிடமும் கூறமுடியாது. இது தொடர்பிலான கணக்கு வழக்குகளை நாம் யாரிடமும் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம் கேபி தரப்பினரான குலம் மற்றும் ஜெயம் உள்ளிட்டவர்களைச் சேர்ந்தவர்களிடம் இச்சம்பவம் தொடர்பில் வினவியபோது, மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த ஒரு தலைவர் பிரபாகரன். அவர் இறந்தமைக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டியது எமது கடமையாகும். மக்கள் மத்தியில் கணக்கு வழக்குகளைக் காட்டும் பட்சத்தில் தான் மக்களும் நம்பிக்கையுடன் தமது ஆதரவினையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குவர். எம்மை நம்பி பலர் கடன்பெற்று பணம் தந்துள்ளனர். அந்தக் காசுகளை ஏதோவொரு வகையில் நாம் திருப்பிச் செலுத்த வேண்டும். அல்லது அவர்களுக்கு காத்திரமான பதிலொன்றையாவது கூறவேண்டும். கணக்கு வழக்குகள் செலவுகள், எவ்வளவு கையிருப்பு இருக்கின்றது என்பன தொடர்பில் உண்மைநிலையைத் தெளிவுபடுத்தும் போது தான் எம்மை நம்பி கடனாக பலலட்சம் சுவிஸ் பிராங்குகளைப் பெற்றுத்தந்த சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் மத்தியில் எவ்வித குழப்பமின்றி தெளிவான நிலை காணப்படும். அத்துடன் நாம் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதாவது வகை செய்ய வேண்டும். அன்றேல் அவர்களுக்கு ஏதாவது ஒரு பதிலைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நாம் இதுபற்றி கேட்டோம்.
அத்துடன் எமது மக்களின் தேசியத் தலைவராக இருந்த தமிழ் மக்களின் விடிவிற்கான ஒரே நம்பிக்கை நட்சத்திரமான பிரபாகரனின் இழப்பினை மூடிமறைத்து மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி பிழைப்பு நடத்தக்கூடாது என்பதையும் நாம் இதன்போது சுட்டிக்காட்டிய போதே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அவர்களுடன் கைகலப்பாக மாறியது. ஆனால் இதன் பிரதிபலனையும், இதற்கான பதிலையும் சுவிஸ்வாழ் தமிழ்மக்களே அவர்களுக்கு வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் தரப்பிலும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்மக்களின் விடுதலையிலும், நல்வாழ்விலும் அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள் இச்சம்பவம் தொடர்பில் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளதுடன், தமது கருத்துக்களையும் கூறியுள்ளனர். எது எப்படியிருப்பினும் எமது தலைவரின் இழப்பை மூடிமறைத்து தமது சுயநலனுக்காகவும், பணத் தேவைகளுக்காகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. குலம் மற்றும் ஜெயம் போன்றவர்கள் நாமறியக் கூடிய வகையில் நீதியாகவும், நியாயமாகவும் நடந்து கொண்டு செயற்பட்டவர்கள் என்பது அறிந்த விடயமாகும். ஆகவே இவர்களைத் தாக்கும் அளவுக்கு நெடியவன் தரப்பினர் சென்றிருப்பது வன்னியில் தாம் தொடர்ந்த செயற்பாடுகளையே சுவிஸிலும் செயற்படுத்த முனைகிறார்கள் என்பதையே காட்டுகின்றது. மாற்று இயக்கத்தவர் மற்றும் மாற்றுக் கருத்தினர் மீதுதான் இதுவரை காலமும் தாக்குதல்களைத் தொடுத்து வந்த இவர்கள் தற்போது தமக்குள்ளேயே மோதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் இதுவோர் கண்டிக்கத்தக்க வேண்டிய செயல் என்று தெரிவித்துள்ளனர்.
வியாழன், 1 அக்டோபர், 2009
புலிகளின் தலைவர்கள் சிலர் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளனரா?

இலங்கை அரசின் தடுப்புக் காவலில் கொழும்பில் உள்ள புலித் தலைவர்கள் சிலர் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல்தீர்வின் கொழும்பு-அமெரிக்கா கூட்டுமுறையில் இணைந்து செயற்பட இணங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிநாட்டு அமைச்சர் ரோகித பொகொல்லகமவும் இதுகுறித்து அமெரிக்காவுடன் விளக்கமாக கலந்துரையாடவே சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. புலிகளமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறைகளிலுள்ள சந்தேக நபர்கள் விவகாரங்களை அமெரிக்கா கையாளவேண்டும் என்றும் இவர்கள் இருவரும் கேட்டுள்ளனர்.
இதேவேளை செப்டம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட இருந்த அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற மீறல் அறிக்கையானது கோத்தபாயவின் தலையீட்டைத் தொடர்ந்தே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிறெஸ் அறிக்கை கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்கது.
போர்க்காலத்தில் பணியாற்றிய 5 வன்னி மருத்துவர்களையும் பெருமதிப்புக் கொடுத்து கௌரவிக்கவேண்டிய கட்டத்தில், இலங்கையரசு அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்ற வாக்குமூலத்தைப் பெற்றபோது சர்வதேசம் வாய்கட்டி வேடிக்கை பார்த்தது. இதற்குள் பயங்கரவாதத்தை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என அறிவதற்காக இலங்கை சட்டமா அதிபர் அமெரிக்கா பயணமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புக்காவலில் உள்ள சுமார் 15,000 புலிகளையும் சிறப்பு நீதிமன்றங்களில் நிறுத்தி விசாரணை செய்வதே இலங்கை அரசின் திட்டம் என உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.
ஆனால், போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ள முனையும் இலங்கைத் தலைமையோ தற்போது புதியதொடு முறைப்படி அமைந்த அரசியல் தீர்வுத் திட்டத்துடன் அமெரிக்காவை அணுகுவதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து அமெரிக்காவின் பதில் என்ன என்பது இன்னமும் தெரிய வரவில்லை. ஆனால் ஐ.நா நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹொன “வெற்றியீட்டியவர்களை தொந்தரவு செய்யமுடியாது’ எனக் கூறியதில் இருந்து அவர்களின் தாம் கூறுவதை அனைவரும் ஏற்க வேண்டும் என உள்ள மனப்போக்கு புரிகின்றது.
இதற்கிடையில் கொழும்பு-அமெரிக்கா தீர்வு குறித்து இந்தியாவும் கவலை கொள்வதாகத் தெரிகிறது. இந்தியாவை எப்போதுமே விரோதமாகப் பார்த்தார்கள் சிங்களவர்கள், இப்போது ஈழத்தமிழர்களும் அப்படியே பார்ப்பதால் இந்தியாவுக்கு ஏதேனும் சமூக நலன்கள் கிடைப்பதென்பது கடினமாக இருக்கும் எனவும் அவதானிகள் கூறுகிறார்கள்.
சுற்றியுள்ள நாடுகளின் நிலைப்பாடு என்னவென்றாலும், இப்போதைய செய்தி உண்மையென்றால், இதுவரை காலமும் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளுக்காகப் போராடிய தேசியத் தலைவரின் வழியில் சென்ற, இப்போது அரசின் பிடியிலுள்ள தலைவர்களில் யார் யார் எமது மக்களுக்கு விரோதமாக அரசு காட்டும் பதவி மோகத்துக்கு மசியப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வந்துவிடும்.
செவ்வாய், 29 செப்டம்பர், 2009
புலிகள் எரித்திரியாவிடம் ஆயுதக் கொள்வனவுக்கு நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாம்: கொழும்பு ஆங்கில பத்திரிகை தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எரித்திரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக இலங்கையின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அவற்றை எரித்திரியா புலிகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரித்திரிய பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சந்திப்புக்களை நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஒழுங்கு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு ஒன்றில் குழப்ப நிலையை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சர்வதேச நாடுகள் விசாரணை நடத்த வேண்டுமென அரசாங்கத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் எரித்திரியாவுடனான தொடர்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படை வளத்தை அதிகரிக்கவும் நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்த நிறுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














