வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பார்வதியம்பாள் வேலுப்பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்வதியம்பாள் வேலுப்பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் காலமானார்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள்(வயது81) இன்று ஞாயிற்றுக்கிழமை(20-02-2011) காலை 6மணியளவில் காலமானார்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

வெளிநாட்டுக்கு பறக்கும் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை


விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதியம்பாள் வேலுப்பிள்ளை வெளிநாட்டுக்கு நேற்று பயணமானார்.பனாகொடை இராணுவ முகாமில் அவரது கணவனுடன் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கணவர் வேலுப்பிள்ளை மரணமானதை அடுத்து அவர் இறுதிக்கிரியைகளுக்காக வல்வெட்டித்துறைக்கு வந்திருந்தார். சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மையார் சிறிது காலம் அங்கு தங்கியிருந்தார். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சிவாஜிலிங்கம் செய்த பயண ஒழுங்குகளை அடுத்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார். பார்வதி அம்மையாரின் பிள்ளைகள் இந்தியா, டென்மார்க் மற்றும் கனடாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.