வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேர்தல்கள் திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல்கள் திணைக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 செப்டம்பர், 2012

மூன்று மாகாணங்களிலும் 48 சதவீதமான வாக்குப்பதிவு



ன்று நடைபெற்ற 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் சுமார் 48 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களின் தொகையில் வீழ்ச்சி

ள்ளுராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளவர்களின் தொகை கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும் போது 1இலட்சத்து 56ஆயிரத்து 147 இனால் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

புதன், 2 பிப்ரவரி, 2011

தபால் மூல வாக்களிப்பு மார்ச் 8, 9ஆம் திகதிகளில்

டைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மார்ச் 8, 9 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

புதன், 19 ஜனவரி, 2011

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை முதல் ஆரம்பம்

லைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் நாளை 20 ஆம் திகதி புதன்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வியாழன், 8 ஏப்ரல், 2010

ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு காலை 7.00 மணி முதல் நடைபெறுகிறது

ஏழாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள 11,102 வாக்களிப்பு நிலையங்களில் இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறுகிறது.
196 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு நேரடியாகத் தெரிவுசெய்வதற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலும் 7,620 பேர் களத்தில் குதித்துள்ளனர். இவர்களைத் தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

வியாழன், 4 மார்ச், 2010

ஒரு கோடி வாக்காளர் அட்டை அச்சடிக்கக் கையளிப்பு : தபால்மூல வாக்களிப்பு 25,26இல்


பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ள ஒருகோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 500 பேருக்கான வாக்காளர் அட்டைகளும் அச்சடிப்பதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திடம் ஒரேநாளில் கையளிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதேவேளை, ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறும்.

வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டதன் பின்னர் அவற்றை ஒரே நாளில் தபால் திணைக்களத்திடம் கையளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்காளர் அட்டைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காமையினால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகச் சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்தே வாக்காளர் அட்டைகளை ஒரேநாளில் தபால் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை விடவும் பொதுதேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைவானது என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படவிருப்பதனால் வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு நாட்களுக்குள் விநியோகித்து முடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.