வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம்


பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே இறுக்கமான நிலை காணப்படுவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட் பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளன. அவற்றின் விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களின் விபரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அல்லது நாளை திங்கட்கிழமை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் பெரும்பாலும் அரசாங்கத் தரப்புடன் இணைந்தே போட்டியி டலாமென நம்பப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அதே போல், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இன்ன மும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதேவேளை, கூட்டணிக் கட்சிக ளுக்கு ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வாரென்று வேட்பாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா தெரிவித்தார்.இது குறித்து அரசியல் கட்சிகளு டன் கலந்தாலோசனைகள் இடம் பெற்று வருவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு


ஜனவரி 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள தபால் மூல வாக்காளர்களின் நன்மை கருதி 2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் அலுவலக நேரங்களில் மாவட்டச் செயலகங்கள் மற்றும் கச்சேரிகளிலும் இவை வைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

தேர்தலுக்குரிய வாக்காளர் பதிவேடுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் வருமாறு:

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கொழும்பு 07, தொழில் செயலகம் நாரஹேன்பிட்டிய கொழும்பு 05, கல்வியமைச்சு இசுருபாய பத்தரமுல்லை, பதிவாளர் நாயகம் திணைக்களம் டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை மாவட்ட செயலகம்/ கச்சேரி டாம் வீதி கொழும்பு 12 ,அஞ்சல் திணைக்கள தலைமையகம் டீ. ஆர். விஜேவர்தன மாவத்தை கொழும்பு 10, வீடு மற்றும் பொதுவசதிகள் அமைச்சு செத்சிறிபாய ,பத்தரமுல்லை தரைப்படை தலைமையகம் கொழும்பு 03, கடற்படை தலைமையகம் கொழும்பு 01, விமானப் படை தலைமையகம் கொழும்பு 02, பொலிஸ் தலைமையகம் கொழும்பு 01, சிவில் பாதுகாப்பு திணைக்களம் இல. 23 ஸ்டேஷன் றோட் பம்பலப்பிட்டி கொழும்பு 04.

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் வருமாறு:

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்த வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் ,கொழும்பு மாவட்டம், 395 பழைய கோட்டே றோட் ,ராஜகிரிய 10107 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்படல் வேண்டும்.

ஏனைய மாவட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்கள் யாவும் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பப்படல் வேண்டும். இதற்குரிய விண்ணப்பப் படிவங்களை தேருநர் பதிவேடுகள் காட்சிக்கு வைக்கப்பட்ட இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரிகள் தாமதியாது தங்களது விண்ணப்பங்களை உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் ஊடாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

தென் மாகாணசபை தேர்தலில் ஜ.ம.சு.மு வெற்றியீட்டியுள்ளது!


தென் மாகாணசபைக்கு நேற்று இடம்பெற்ற தேர்தலில் 67.88 வீத வாக்குகளைபெற்று ஜ.ம.சு.மு 38 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. ஜ.தே.க. 25.09 வீத வாக்குகளைப்பெற்று 14 ஆசனங்களையும், ஜே.வி.பி 6.11 வீத வாக்குகளைபெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது என வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதன், 7 அக்டோபர், 2009

இரு பகுதிகளில் தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்படும் சாத்தியம்-தேர்தல் ஆணையாளர்


அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரு பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களிற்காக ஒட்டப்பட்ட பிரசுரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவை அகற்றப்படாவிடின் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இரு பகுதிகளிற்குமான முடிவுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் இதன் போது எச்சரித்துள்ளார்