வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 அக்டோபர், 2009

வடக்கு- கிழக்கிலும் களைகட்டும் தீபாவளி பண்டிகை


தீபாவளி கொண்டாட்டங்களில் இம்முறை யாழ்ப்பாணத்தில் மக்கள் மும்முரமாகஈடுபட்டுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணம் நகரப் பகுதி, பருத்தித்றை கரவெட்டி, சாவகச்சேரி, மானிப்பாய, சுண்ணாகம் உட்பட பல இடங்களிலும் நடைபாதை வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் நிறைந்து காணப்படுவதுடன், பொது மக்கள் வர்த்தக நிலையங்களிலும் அதிகளவில் துணிவகைகளை கொள்வனவு செய்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த பல வருடங்களாக குடாநாட்டிலும் மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்பட்ட மோதல் காரணமாக தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் கடந்த காலங்களில் பெருமளவில் களைகட்டாத நிலை காணப்பட்டது . ஆனாலும் இவ்வாண்டு மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பொது மக்கள அதிக ஆர்வத்துடன் தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்திற்காக புதுப் புடவைகள் கொள்வனவு செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மக்கள் தீபாவளி பண்டிகைக்காக புது ஆடைகளை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.

நகரப்பகுதிக்கு மக்கள் அதிக அளவில் வருகை தந்து தமக்குத் தேவையான புத்தாடைகள், உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்ததையடுத்து வந்துள்ள முதலாவது தீபாவளிப் பண்டிகை இது என்பது குறி்ப்பிடத்தக்கது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வியாபார நடவடிக்கைகள் பலமடங்கு இம்முறை அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது.

மோதல்கள், குண்டுவெடிப்புகள், உயிராபத்துக்கான சூழ்நிலைகள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும், தற்போது நிலவுகின்ற அமைதிச் சூழ்நிலை காரணமாகவும் இம்முறை தீபாவளி களைகட்டியிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

எனினும் முகாம்களில் இருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களுக்குச் செல்லாத நிலையில் இந்தத்தீபாவளி அதிக மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமையவில்லை என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சனி, 10 அக்டோபர், 2009

தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும்


தீபாவளியை பற்றி நிறைய கதைகளும் நம்பிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய் , ஸ்ரீ ராமர் கைகேயியின் வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகக் கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் கொண்டாடுகின்றனர். தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞானமும், அறியாமையும், அஹங்காரமும் அழிந்ததற்கு அடையாளமாக எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி தீபங்கள் ஏற்றி வாணவேடிக்கைகளுடன் கொண்டாடவேண்டுமென்று அந்த அரக்கன் கேட்ட வரத்தின்படி இத்திருவிழாவை அனைவரும் காலம் காலமாகக் கொண்டாடுகின்றனர்.

மூன்றாவதாய் தசாவதாரங்களில் ஒன்றான வாமனாவதாரம் பற்றிய கதை. அசுரர்களின் அரசனான பாலி(ப்ரஹலாதனின் பேரன்), மூவுலகையும் ஆட்கொள்ள பகவானை நினைத்து விஸ்வஜித் யாகம் புரிந்து தேவர்களின் அரசனான இந்திரனிடமிருந்து தேவலோகத்தை கைபற்றினார்.

மனம் வாடிய அதிதி(தேவர்களின் அன்னை) மஹாவிஷ்ணுவிடம் முறையிட, வாமனராய் மிக சிறிய பிராமணர் உருவில் அவதரித்து , அஸ்வமேத யாகம் நடத்திக்கொண்டிருந்த அரசன் முன் தோன்றினார். வாமன உருவிலிருந்த விஷ்ணுவும் அரசவையில் பாலியிடம் மூன்று அடி மட்டுமே அளக்க தேவையான நிலம் வேண்ட, மன்னனும் அவரது கேளிக்கையை ஏளனமாய் நினைத்து வரம் வழங்கினார். வாமனரோ விஸ்வரூபமெடுத்து தம் முதல் அடியால் மண்ணுலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகையையும் அளந்தார். மூன்றாம் அடிக்கு இடம் தேட, பாலியோ வேறு வழியின்றி கொடுத்த வாக்கை நிறைவேற்ற பகவானுக்கு தன் சிரம் தாழ்த்தி இடமளித்தார்.

இவ்வாறாக சொன்ன சொல்லை காப்பாற்றி மஹாவிஷ்ணுவின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். சில ஊர்களில் பாலியின் கதையை நினைவுகூறும் வகையிலும் தீபாவளித்திருநாளை கொண்டாடுகின்றனர்.