வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திருமதி விஜயகலா மகேஸ்வரனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமதி விஜயகலா மகேஸ்வரனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 நவம்பர், 2010

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மடத்திலிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் மறுப்பு

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான மடத்திலிருந்தும் ஆலயத்திற்கு அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையினை கூடிய விரைவில் மேற்கொண்டு, ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீளவும் பெற்றுத்தர வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் ஐக்கியதேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

யாழ்.மாவட்ட ஐ.தே.க. வேட்பாளராக மகேஸ்வரனின் துணைவியாரும் போட்டி


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான தியாகராஜா மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் இடம்பெற்றுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
அந்தப் பட்டியலில் ஐ.தே. கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.சத்தியேந்திரா, சிறீ தாமோதரா, கே.லவக்குமார், எம்.குலேந்திரராஜா, ரி.கிருபைதாசன் மற்றும் இரு முஸ்லீம் வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தா சென்று ஆவணங்களில் கையெழுத்து இடுவர் என்றும் நாளை மறுதினம் யாழ். செயலகத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.