கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து சர்வகட்சி ஆட்சியமைக்க ஐ.தே.க. தயாராகவே உள்ளது. ஆனால் ௭மது நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் ௭ன்று அக் கட்சியின் பிரதிச் செயலாளரும் ௭ம்.பி. யுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். இம்முறை மாகாண சபைத் தேர்தலில் அரசின் வாக்கு வங்கி பின்னடைவைக் கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே டாக்டர் ஜயலத் ஜயவர்தன ௭ம்.பி. இதனைத் தெரிவித்தார்
-













