வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிவநாதன் கிஷோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவநாதன் கிஷோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2011

ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளராக கிஷோர் நியமனம்

னாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழ்க்கூட்டமைப்பின் இரகசியங்களை அம்பலப்படுத்தப்போகிறேன்: சிவநாதன் கிஷோர்


தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் பிரச்சினைகள், அந்த கூட்டணி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் உண்மைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தப்போவதாகவும் அதற்காக இன்று அல்லது நாளை விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைக்கும் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கிஷோர், தான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வன்னியில் போட்டியிடவுள்ளதாக அடித்துக்கூறியுள்ளார்.

தன்னைப்போலவே, கூட்டமைப்பின் இன்னொரு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரட்ணமும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இன்னமும் உத்தியோகபூர்வ தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.

வியாழன், 19 நவம்பர், 2009

சிவநாதன் கிஷோர் எம்.பி ஜனாதிபதிக்கு பிறந்த தின வாழ்த்து (பட இணைப்பு)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.