வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இங்கிலாந்து இளவரசி டயானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இங்கிலாந்து இளவரசி டயானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 மார்ச், 2010

டயானா மரணம் : அல்பா சுரங்கத்தில் நடந்தது விபத்தல்ல; கொலை! : புதுத் தகவல் _



இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை; அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தத் தகவல் தற்போது கசிந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் இப்படி ஒரு பேச்சு அடிபட்டது எனினும், அது ஊர்ஜிதமாகமலே மறைந்து போனது. தற்போது மீண்டும் அது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இளவரசி டயானா தனது காதலர் டோனி அல்பயத்துடன் பாரீஸ் நகரில் சுரங்க பாதையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.