வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

முன்னாள் அமைச்சர் முரளிதரனுக்கு தேசியப் பட்டியலில் இடம் - தங்கேஸ்வரி தமிழர்கள் தரப்பில் போட்டி


தேசிய நல்லிணக்க, ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படவுள்ளதாக அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மாவட்டத்தில் ஆளும்கட்சி சார்பில் கணேசமூர்த்தி, குணம் (களுதாவளை) , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன், ரமேஷ் ஆகியோர் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் முரளிதரன், இன்னுமொரு தமிழ் வேட்பாளன் பெயர் இன்று சிபார்சு செய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பில் ஆளும் தரப்பில் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா ஆகியோர் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை இல்லை -அமைச்சர் முரளிதரன்


இலங்கையில் நிலைமைகள் முன்னேறி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள 2 லட்சம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார்.

தி.மு.கவின் இந்த நடவடிக்கையை வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கரும் வரவேற்றிருந்தார். அத்துடன், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அத்தகைய தேவை எதுவும் இல்லை என மறுத்துள்ள அமைச்சர் முரளிதரன், இலங்கையில் நிலைமைகள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதால் இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு இதுதான் சரியான தருணம் எனவும் குறிப்பிட்டார்.