வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அசின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஏப்ரல், 2010

கொச்சி அணியின் பிரபல தூதுவராக அசின்

அணியை பிரபலப்படுத்தம் தூதுவராக அசின் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக அவருடன் அந்த அணி உரிமையாளர்கள் பேசி வருகிறார்கள். விரைவில் அசின் கொச்சி அணியின் தூதுவராக அறிவிக்கப்படுகிறார்.

திங்கள், 16 நவம்பர், 2009

எனக்கு முக்கியத்துவம் இல்லாததால்தான் லண்டன் ட்ரீம்ஸ் ஓடல! -அசின்


'லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததும்கூட படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது' என்று புதிய விளக்கம் கூறியுள்ளார் நடிகை அசின்.

லண்டன் ட்ரீம்ஸ் வெளியான பிறகு அசின் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. உடனே இல்லையில்லை அவர் எங்களுடன்தான் வசிக்கிறார் என்று அசின் அப்பா ஜோசப் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இன்னமும் அசின் தனியாகத்தான வசிக்கிறார்.

தன்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், லண்டன் டிரீம்ஸ் படம் ஓடாதது குறித்த வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், "லண்டன் டிரீம்ஸ் பட ரிசல்ட்டால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வழக்கம்போல் சந்தோஷமாக இருக்கிறேன். லண்டன் டிரீம்ஸ் கதையை கேட்ட போதே இரண்டு கதாநாயகர்களின் நட்பை முன்னிலைப்படுத்தும் கதை என்பதை புரிந்து கொண்டேன். என்னுடன் நடித்த இருவருமே இந்தியில் பெரிய ஹீரோக்கள். அவர்களை சுற்றித்தான் கதை நகர்ந்தது. எனக்கு முக்கியத்துவம் இல்லை. துணை கேரக்டர் போலத்தான் வந்துபோனேன்...

கஜினி பட கல்பனா கேரக்டர் போல் எல்லா படங்களும் அமையும் என எதிர்பார்க்க முடியாது. கதாநாயகிக்கு சரிவிகித முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் படங்கள் ஓடும். என்னை எதிர்பார்த்து வருபவர்கள் ஏமாந்துவிடுவதாலேயே இந்தப் படத்துக்கு வரவேற்பு குறைந்துவிட்டது" என்றார்.

புதன், 11 நவம்பர், 2009

பெற்றோர்களை பிரிந்தார் அசின்


தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இந்த பழமொழியை கிழ மொழியாக்கிவிட்டு கிர்ரென பறந்துவிட்டார் அசின். கஜினி படத்தின் மூலம் இந்திக்கு நுழைந்த அசின், ஒரே படத்தில் எட்டாத உயரத்திற்கு போனார். ஆஹா ஓஹோ என்று கொண்டாடினார்கள் கான்களும், மான்களும்! மகள் கூடவே எக்ஸ்ட்ரா லக்கேஜாக சுற்றி வந்த தாடி வைத்த ஜோசப் தோட்டம்கல்லை தடி கொண்டு விரட்டாத குறையாக விரட்டினார்கள் மேற்படி மான்களும் கான்களும்.

அப்பாவை ரூமிலேயே இருக்க சொல்லு. நீ மட்டும் ஷ§ட்டிங் வா என்று அவர்கள் போட்ட கண்டிஷனுக்கு வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் அசின்.

மும்பையிலேயே தங்கியிருந்தாலும் மகளோடு ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு போக முடியாத கொடுமைக்கு ஆளான அப்பா, அவ்வபோது புலம்பி வைக்க, “கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும். பொறுத்துக்கோங்க” என்றாராம் அசின். ஆனால், ஒரேயடியா சரியாப்போச்சு என்று அசின் சொன்னதுதான் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அப்பாவை. தனது பெற்றோர்களை பிரிந்து தனியாக வசிக்கிறாராம் அசின். “கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு” என்று ஒரு பதிலோடு கட் பண்ணுகிறார் கேள்வி கேட்பவர்களை.

கஜினி ஹிட் ஆனதும் மும்பையிலேயே வீடு பார்த்து தங்கிக் கொண்ட அசின் குடும்பம், இப்போது அவர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறது.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

ஷாருக்கானை எனக்கு ரொம்ப பிடிக்கும்: அசின்


ஷாருக்கானை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவருடன் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறேன். ஷாருக்கானுடன் நடிக்க விடாமல் சல்மான் தடுத்தாரா? என்னைப் பற்றி வீண் வதந்திகள் பரப்பி லருகின்றனர் என்று அசின் ஆவேசமாக கூறியுள்ளார்.

கஜினி மூலம் இந்தி திரையுலகில் பிரபலமானவர் அசின். அப்படத்தில் அமீர்கான் ஜோடியானதால் முன்னணி கதாநாயகர்களை கவர்ந்தார். நிறைய பேர் தங்களுடன் ஜோடி சேர்க்க ஆர்வம் காட்டினார்கள்.
கஜினியில் நடித்தபோது அமீர்கானுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. தற்போது சல்மான்கான் ஜோடியாக லண்டன் டீரீம்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் நடித்த போது சல்மான்கான், அசின் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. அசினுக்கு சல்மான்கான் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும், பேசப்பட்டது.

இந்த நிலையில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க அசினுக்கு வாய்ப்பு வந்ததாகவும் சல்மான்கான் அதில் நடிக்க கூடாது என்று தடுத்ததால் அவர் சொல்படி நடிக்க மறுத்துவிட்டதாகவும் மேலும் செய்திகள் வெளியாயின.

இந்தி திரையுலகில் இது பரபரப்பாக பேசப்படுவதால் இதுபற்றி அசின் கூறும்போது,
ஷாருக்கானை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறேன்.

ஆனால் ஷாருக்கான் ஜோடியாக ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்க அப்படத்தின் இயக்குனர் பராக்கான் என்னை அணுகியதாகவும் நான் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளது. அப்படி நடக்கவே இல்லை. யாரும் என்னிடம் ஷாருக்கானுடன் நடிக்க அணுகவில்லை.

ஷாருக்கானுடன் நடிக்காததற்கு சல்மான்கான்தான் காரணம் அவர் செல்லித்தான் நான் மறுத்தேன் என்றும் வதந்தி பரப்பி உள்ளனர். ஏன் தான் என்னை பற்றி இப்படி யெல்லாம் பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்று புரியவில்லை.

இதெல்லாம் வீண் வதந்திகள்தான். யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். திட்டமிட்டு தான் இது போன்ற பொய்யான புரளிகளை கிளப்பி வருகின்றனர். மனதுக்கு சங்கடமாக உள்ளது என்கிறார் வருத்தத்துடன்