வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 மே, 2013

குருதி தோய்ந்த இவ்வரலாற்று நாளில், பரிதி துடைத்தெழுவோம் வாரீர்



ழிவுகளுக்குப் பிந்திய எமது மண்ணில் அமைதி நிலை வலுப்பெற்று வரும் நிலையில், உழைக்கும் மக்களின் உன்னத தினத்தில், அம்மக்களின் ஒளிமயமான எதிர்கால நலன்காக்க தொடர்ந்தும் நாம் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வருட உழைக்கும் மக்களின் தினத்தையொட்டி விடுத்திருக்கும் செய்தியில் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உழைக்கும் எமது மக்களை ஒதுக்கிவிடாமல், தொடர்ந்தும் அவர்களுடன் இருந்து, அம்மக்களது நலன்களுக்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். உழைக்கும் மக்கள் இருக்கும் வரையில்தான் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அம் மக்களது குரலாகவே எமது குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்லாது, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேலும் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் நாம் வெற்றி கண்டு வருகிறோம். கடந்த கால அழிவு யுத்தமானது எமது உழைக்கும் மக்களுக்கும் பாரிய பாதிப்புக்களையும் அழிவுகளையுமே கொண்டுவந்திருந்தது. ஆனால், இன்று அந்நிலை மாற்றப்பட்டு ஓர் அமைதிச் சூழல் வளர்ச்சி பெற்று வருகிறது. வளரும் இந்த அமைதிச் சூழலை பாதுகாப்பதுடன் எமது உரிமைகளையும் பெற்றவாறு அதனை வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாக அமைய வேண்டும். அதனை விடுத்து வெறுமனே உரிமை, உரிமை என கோஷங்களை மட்டும் வீராவேசமாக எழுப்பி, எமது மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் சுய அரசியல் இலாபம் தேட முயன்று வரும் சமூக விரோதச் சக்திகளுக்கு எடுபட்டு, இருப்பதையும் இழந்து, பெற வேண்டியவற்றையும் இழந்து, எமது மக்கள் மீண்டும் கடந்த கால பின்னடைவுக்குள் விழுந்து விடக் கூடாது. எனவே, கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரிவரப் பயன்படுத்தி, கிடைத்தவற்றை பாதுகாத்து, கிடைக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொள்ள ஓரணி திரண்டு உழைக்க முன்வருமாறு இன்றைய உழைப்பாளர் தினத்தில் எமது மக்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். முயற்சித்தால் இயலாதது எதுவுமில்லை, அந்த முயற்சி நடைமுறைச் சாத்தியமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எமது உரிமைகள் அனைத்தும் தாமாக வெல்லப்படும் என்பது உறுதி! குருதி தோய்ந்த இவ் வரலாற்று நாளில், பரிதி துடைத் தெழுவோம் வாரீர்! வெறும் வாய் வார்த்தைகளால் அன்றி! சிறந்த செயற்பாடுகளின் மூலம்! உறவுக்குக் கரம் கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் நாம் -உழைப்பாளர்களுடன் என்றும் கரம் கோர்த்தே வருகின்றோம் ! -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’