வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 ஏப்ரல், 2013

அரசின் அனுசரணை மற்றும் இராணுவம், பொலிஸாரின் ஆதரவுடனுமே வடக்கில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன : த.தே.கூ.

ரசாங்கத்தின் அனுசரணையுடனும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடனுமேயே வடக்கில் இனம்தெரியாத கும்பல்கள் முகமூடி அணிந்து ஆயுதங்கள் சகிதம் தாக்குதல்களை முன்னெடுக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டினார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு நாளும் நாட்டில் வன்முறைகள் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன. குறிப்பாக இன்று அதிகாலையில் கூட உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் இனந்தெரியாத கும்பலினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. அங்கு கடமையாற்றிய பணியாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் பொலிஸாரின் அனுமதியுடன் பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திலும் சிங்கக் கொடியுடன் வந்தவர்களால் கொங்கிறீட் கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் மூன்று பேரை நாம் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தோம். அதில் ஒருவர் சி.ஐ.டி. புலனாய்வுத் துறை அதிகாரி. எதுவித நடவடிக்கையும் எடுக்காது அவர்களை பொலிஸார் விடுவித்து விட்டனர். இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் வடக்கில் இனம்தெரியாத கும்பல்கள் முகமூடி அணிந்து ஆயுதங்கள் சகிதம் எவ்வாறு தமது நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முடியும். இவ்வாறான பிரச்சினை இன்று முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய கலாசார உடைகளில் கைவைத்து அவர்களுக்கு எதிராக பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தை தவிர வேறு சமூகங்கள் வாழ முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைக்கு சிங்கள மக்கள் தாம் உடந்தை இல்லையென்பதை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்ல சிந்தனையுடைய சிங்கள பௌத்த மக்கள் எம்மோடு இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு அவர்களின் கலாசார ரீதியிலான ஆடைகளை அணிய முன்வர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’