
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனநாயகக் கட்சியின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சியில் உள்ளவர்களினால் எனது உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனது தலைமையில் உருவான கட்சியில் அரசில் அங்கம் வகிக்கும் பலர் இணைந்து செயற்படவுள்ளனர். எனது வாக்குரிமையை இல்லாமல் செய்தவர்கள் என்னோடு போட்டிபோடுவதற்கு தைரியம் இருந்தால் எனக்கு வாக்குரிமையை வழங்கி அடுத்துவரும் தேர்தலில் போட்டியிடுமாறு சவால்விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’