வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஆஸி விவகாரம்: தரகரின் சகோதரன் டி.ஐ.டியினரால் கைது



ட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல உடந்தையாக இருந்த இருவரில் ஒருவரின் சகோதரர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (டி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளார். மாமுனை வடக்கு சென்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த ஒருவரும், சக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருமாக இணைந்து மாமுனை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள 80 பேரிடம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும், கடந்த 20 ஆம் திகதி இரவு 80 பேரையும் அனுப்பிவைத்த போது அவர்கள் பருத்தித்துறை முனையில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் முன்னாள் போராளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பணம் பெற்றுக் கொண்டு அவுஸ்திரேலியாவில் விடுவதாக கூறிய இருவரும் முன்னாள் போராளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பணத்தினை பெற்றுக் கொண்டவர்கள் தலை மறைவாகியுள்ள நிலையில், ஒருவரின் சகோதரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்யப்பட்ட நபரின் மனைவியிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’