.jpg)
கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் முடக்கம், நீதிமன்றங்களின்; சுயாதீனத்தன்மைக்கு எதிராக செயற்படல் போன்றன தொடர்பில் திருப்தி அடைய முடியாது என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோத ஆட்கடத்தல்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் கொலைச்செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையிலும் ஆக்கப்பூர்வமான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியா பொதுநலவாய அமைப்புக்களின் கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றுமாறு இலங்கையை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’