நேற்று (5) கிளிநொச்சி மாவட்டசெயலகத்தில் நடைபெற்ற தேசிய உணவு கலாச்சார மேம்பாட்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தமிழருடைய பண்பாட்டு வரலாற்றில் தனித்துவமான உணவுப் பொருட்களை தயாரித்து பரிமாறி உண்கின்ற நடைமுறையும் மிக முக்கியமானதொரு கலாசாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலில் அவை முற்றாக மருகி விட்டன. அன்று தமிழ் பண்பாட்டு நிகழ்வுகளிலும் விழாக்களிலும் இவ்வாறான உணவுப் பண்டங்கள் பரிமாறப்படும் ஆனால் இன்று வளர்ச்சி பெற்ற நாகரீக போக்கிற்கமைவான உணவுகளும் உடனடி தயாரிப்புக்களுமே பரிமாறப்படுகின்றன. இதேவேளை எமது மூத்த குடிமக்கள் இன்றும் பூரண தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இவ்வாறான பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களே காரணமாக அமைந்துள்ளன ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் அவ்வாறான உணவுகளை விரும்பி உட்கொள்வதில்லை. அத்தோடு இன்று பாரம்பரிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைப்பதில்லை. ஆனால் தென்னிலங்கையில் உள்ள சந்தைகளில் சிங்களப் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்வதற்கான பகுதி தனியாக அமைக்கப்பட்டிருப்பதை காணமுடியும் ஆனால் எமது பகுதிகளில் அவைகிடைப்பதுமில்லை. எனவே இன்று இவ்வாறான தேசிய உணவு கலாசார மேம்பாட்டு விழா எடுக்கப்பட வேண்டிய நிலைக்கு எமது சமூகம் வந்துள்ளதெனில் மறைக்கப்பட்டுவரும் எமது பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களோடு எமது உணவுகலாசாரமும் மறைந்து போயுள்ளதையே குறித்துக்காட்டுகின்றது. இருப்பினும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகள் இன்றும் எமது பாரம்பரிய உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆகவே இந்த மண்ணில் வாழுகின்ற மக்கள் இம்மண்ணின் பண்பாட்டைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பைக் கொண்டவர்கள் எனவே இவ்வாறான பாரம்பரியங்கள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். அதற்காக இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவற்றை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு எமது மூத்த தலைமுறையினருக்கு உண்டு அந்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் மீண்டும் எமது கலாசார உணவுப் பாரம்பரியம் நிலைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினர் வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இவ் தேசிய உணவு கலாசார மேம்பாட்டு விழாவினை ஒழுங்கமைத்திருந்தனர். நிகழ்வில் முன்னதாக மாவட்ட செயலகத்திற்கு அருகிலமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கலாசார பொங்கல் விழாவினையும் பாராளுமன்ற உறுப்பனர் சந்திரகுமார் அவர்கள் அரம்பித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இவ் தேசிய உணவு கலாசார மேம்பாட்டு விழாவில் மாவட்ட சமுர்த்தித்திட்ட பிரதிப்பணிப்பாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி, கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகணபவன், பிரதேச செயலாளர்களான நாகேஸ்வரன், முகுந்தன் ,சத்தியசீலன், யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை வரிவுரையாளர் அருந்தாகரன். கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கச்செயலாளர் இறைபிள்ளை. ஆகியோரும்.பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டசெயலக அலுவலர்கள் பொதுமக்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’