மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சன் உட்பட பல நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றப்பட்டுள்ளனர்.
வருடாந்த இடமாற்றம் என்ற அடிப்படையில் எதிர்வரும் மே 2ஆம் திகதி முதல் இந்த இடமாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனால் மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சன் கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வான் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சனை அமைச்சர் றிசாட் பதியுதீன் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலதிகமாக சம்மாந்துறை நீதவான் செல்வி ஏ.கனகரட்னம் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கும் மட்டக்களப்பு மேதிக நீதவான் கே.கருணாகரன் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்திற்கும் வாழைச்சேனை நீதவான் எம்.ஏ.றியாழ் மட்டக்களப்பு மேதிக நீதவானகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைக் காலத்தில் நீதிபதிகளின் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மூத்த சட்டத்தரணிகள் ஐந்து பேரைக் கொண்ட விசேட குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’