வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

யாழ். ஊடக அமையம் நிறுவப்பட்டமை பாராட்டத்தக்கது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


யாழ். ஊடக அமையம் நிறுவப்பட்டமை பாராட்டத்தக்கது என்றும் அதன் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பக்கசார்பின்றி உண்மைச் செய்திகளை வெளியிடுவதே முக்கியமானது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியிலமைந்துள்ள யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்கள் பலப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அவை உண்மை மற்றும் நேர்மையான வழியில் பயணிக்கும் பட்சத்தில் அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராகவுள்ளேன் .

அத்துடன் அமையத்தின் நோக்கம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் இதற்கென ஒழுக்கநெறிக் கோவை அமைத்து செயற்பட வேண்டுமென்பதுடன் உண்மைச் செய்திகளை துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து வெளிக்கொணர்வது ஊடகங்களின் முக்கிய பணியாகவுள்ளதுடன், அதைவிடுத்து நடக்காததொன்றை திரிபுபடுத்தி பொய்ச்செய்திகளை வெளியிட வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், மக்கள் தமது கருத்து, பேச்சு, தொழில் உள்ளிட்ட சகல விடயங்களிலும் சுதந்திரமாக செயற்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டென்றும், அதனை தூண்டவேண்டாமென்றும் கடந்த காலங்களில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, யாழ்.பண்ணைப் பகுதியை மெருகூட்டி அழகுபடுத்துவது தமது நீண்டகால கனவு என்றும் அது தற்போது நிறைவேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும், இதேபோன்று சங்கிலியன் தோப்பை மீளச் செழுமைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையின் முக்கியத்துவம் குறித்து ஊடகவியலாளர்களின் கருத்துக்களையும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் அவதூறான செய்திகள் தொடர்பில் தாம் துறைசார்ந்தோரிடம் பகிரங்கமாக விவாதிக்க தயாராகயிருப்பதாகவும், எமது கொள்கைகளை நாம் வெளிப்படையாகவே வெளியிட்டு வருகின்றோம் என்றும் ஈ.பி.டி.பி தப்புச் செய்தால் உண்மையை நிரூபித்து செய்திகளை வெளியிடுங்கள் என்றும் கட்சி தவறு செய்யும் பட்சத்தில் அதற்கு பொறுப்பெடுத்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

யாழ்.ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பது, ஊடக அமையத்துக்கென நிரந்தரக் கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்;டதுடன் அதற்கேற்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா உடனிருந்தார்.





-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’