வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 1 ஏப்ரல், 2013

அரசை எதிர்க்கும் சக்தி ஐ.தே.க.வுக்கு இல்லை: பொன்சேகா



நாட்டை சீரழித்துவரும் ஊழல்மிக்க இந்த அரசாங்கத்தை எதிர்க்கும் சக்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது என முன்னள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
குளியாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சரத் பொன்சேகா, 'இன்று இந்த நாட்டில் பெயரளவிலேயே ஜனநாயகம் உள்ளது. அது தேர்தலின் போது புள்ளடி இடுவதற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதுவும் இல்லாமல் போய்விடும். நீதிமன்றத்தின் சுயாதீனம் இன்று அரசியல் பிடியில் இருக்கின்றது' என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கையில், 'ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது செயற்திறன் மிக்க தலைவர் ஒருவர் தேவைப்படுகிறார்' என்றார். அத்துடன், 'சரத் பொன்சேகாவை ஐ.தே.க.வில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதோடு முதுகெலும்புள்ள தலைவர் ஒருவரை கட்சியின் தலைவராக நியமிப்பது காலத்தின் தேவை' என்றும் ரங்கே பண்டார எம்.பி மேலும் சுட்டிக்காட்டினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’