வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 மார்ச், 2013

மாத்தளை புதைகுழி குறித்து முழு விசாரணை அவசியம்: ஜே.வி.பி



மா த்தளை புதைகுழி தொடர்பாக முழு அளவிலான விசாரணையொன்று அவசியமென கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அந்த காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு குறிப்பாக இளைஞர்களின் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
குறித்த பகுதியில் புதைக்கப்பட்டவர்கள் யாரென அறிவதற்கு உறவினர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டுமெனவும் அதற்காக ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மனித உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அநுர குமார எம்.பி, மேற்படி உடல்கள், அம்மை நோயால் உயிரிழந்தவர்களது எனக்கூறி விசாரணைகளை தடுக்க பலர் முயன்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். கிளர்ச்சிக் காலத்தின்போது இளைஞர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னிலை சோசலிஷ கட்சி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு முறைப்பாட்டைச் செய்தது. இந்த 154 எலும்புக்கூடுகளும் 1986 – 1992ஆம் ஆண்டுக் காலத்துக்கு உரியவை என ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. 1988 – 89 கிளர்ச்சியின் போது 60,000 இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’