
தெற்காசிய விடயங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளரான றொபேட் ஓ பிளேக்கை சந்தித்தபோதே சுப்ரமணியன் சுவாமி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான பிரிவினை சக்திகளின் வெற்றியாக இந்த தீர்மானம் விளங்கிக்கொள்ளப்படலாம் எனவும் இது புலிகளின் மீட்சிக்கு வழிவகுக்கும் எனவும் அது யாருக்கும் நல்லதல்ல எனவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள் விசாரணை ஜனநாய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பொஸ்னியா அல்லது சயர் நாடுகளை போன்றதல்ல எனவும் அவர் கூறினார். இலங்கையை கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ளவைக்கும் ஒரு விசாரணையை சர்வதேச ரீதியில் நியமிக்கப்பட்ட எந்த அமைப்பும் மேற்கொள்ளும் சாத்தியமில்லை. ஏனென்றால் ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க தீர்மானம் இலங்கையின் மீது எதனையும் கட்டாயப்படுத்தி திணிக்கப்போவதில்லை எனவும் அது சர்வதேச அமைப்பு ஒன்றை விசாரணைக்காக அமைக்ககோருவதாக அமையாது எனவும் இராஜதந்திர திணைக்கள அதிகாரிகளின் பேச்சிலிருந்து தான் அறிந்து கொண்டதாக சுவாமி தெரிவித்துள்ளார். இது புலிகள் சார்ந்த சக்திகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’