ஒரு இனத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும் அந்த வகையில் முழங்காவில் கிருஸ்ணர் ஆலயத்தின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குரியது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (17) கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் கிருஸ்ணாநகர் கிராமத்தில் இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற புண்ணிய கிராம நிகழ்ச்சித்திட்டம் -2013 நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தம், இடம்பெயர்வு,முகாம் வாழ்க்கை போன்ற பல காரணங்களால் எமது இனத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் சிதைந்துவிட்டது கலாசார புறழ்வுகளும் சீரழிவுகளும் நாளாந்த செய்திகளாக பார்க்கின்ற போது மிகவும் வேதனையாக உள்ளது எங்களுடைய இளம் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் காணப்படுகிறது எனவேதான் இன்றைய காலத்தின் தேவையாக இனத்தின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டிய மிகப்பெரும் தேவையுள்ளது அதனடிப்படையில் இந்த ஆலயமும் அதன் தலைவர் குபேந்திரன் அவர்களினதும் காலத்தின் தேவையையொட்டியதான இந்த பணி பாராட்டப்படவேண்டியது தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லப்படவேண்டியது
இங்கு இடம்பெற்ற அறநெறி வகுப்புகளுக்கு வருகின்ற சிறார்கள் முதல் இளம்தலைமுறையினரின் ஓழுக்கநெறி வாழ்க்கை பழக்கவழக்கங்கள் இவர்கள் எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகமாக வளர்வார்கள் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலயத்திற்கு இதற்கு முன்னரும் ஒரு தடவை வருகைதந்திருக்கின்றேன் இங்கே பல தேவைகள் உண்டு அதில் சிலவற்றை தீர்த்து வைத்துள்ளோம் ஆலயத்தின் காணிபிணக்கு தீர்வு காணப்பட்டுள்ளது அததோடு எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்த இரண்டு இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்து மலசல கூடம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோன்று இவ்வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஆலயத்திற்கான இசைவாத்திய கருவிகளை பெறுவதற்கு ஒரு இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்து தருகிறேன் எனத்தெரிவித்த அவர் இன்னும் இரண்டு வாரத்திற்குள் ஆலயத்திற்கான மின்சார விநியோகத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார்
மேலும் முழங்காவில் பிரதேசத்தின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் குறிப்பாக கல்வித்துறையில் அதிகம் அக்கறை எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படும் அத்தோடு முழங்காவில் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர பிரிவில் விஞ்ஞான கணித பிரிவுகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் அதன் மூலம் இந்த பிரதேச மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிருஸ்ணா கலாமன்றத்தினரால் தயாரிக்கப்பட்ட பள்ளிக்காதல் குறும்படம் வெளியீடும் இடம்பெற்றது
ஆலய பரிபாலன சபையின் தலைவர் குபேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் குகேந்திரன் இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிதிட்டப்பணிப்பாளர் ஹேமலோஜினிகுமரன், அதன் உதவிப்பணிப்பாளர் சண்முகநாதன், பூநகரி பிரதேச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் சொர்க்கநாதன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் கட்சியின் பிரதேச அமைப்பாளர் றொபின்சன் கிராம அலுவலர்கள் அறநெறி பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
-->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’