வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 5 மார்ச், 2013

அமைச்சர் றிசாத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்



கில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
புத்தளம் நகரின் பிரதான சுற்று வட்டத்தில் இடம்பெற்ற இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நகர சபையின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன்போது அமைச்சர் றிசாத், புத்தளம் நகரின் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆகியோருக்கு எதிராகவும் சுலோகங்களினை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பப்பட்டது. புத்தளத்தின் அபிவிருத்தியில் அமைச்சர் றிசாத் தலையிட வேண்டாம் எனவும் இதன்போது கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புத்தளம் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான சுற்று வட்டத்திலிருந்து குருநாகல் - புத்தளம் பிரதான வீதியின் ஊடாக நகரின் சுற்று வட்டம் வரை சென்று மீண்டும் புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் தொழிலதிபருமான அலி சப்ரி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்ககையில், "புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் முஸ்லிம்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தவே புத்தளம் நகர பிதா பாயிஸ் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். புத்தளத்தில் கால காலமாக இருந்து வந்த ஞாயிறு வாராந்த சந்தையை நகர பிதா பாயிஸ் தனது தனிப்பட்ட நலன்களுக்காக சனிக்கிழமைக்கு மாற்றியிருக்கிறார். இந்த சந்தை தின மாற்றத்தை புத்தளத்திலுள்ள வர்த்தகர்கள் விரும்பவில்லை. இதனால் வர்த்தகர்கள் வியாபார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.எனவே தான் சனிக்கிழமை மாற்றிய வாராந்த சந்தை தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நாம் கேட்டறிந்து வருகிறோம். எனவே நாம் செய்கின்ற பணியையும் புத்தளத்திலுள்ள மக்கள் எம்முடன் இருப்பதையும் கொஞ்சம் கூடப் பொறுக்க முடியாத நகர சபைத் தலைவர் பாயிஸ் தன்னுடைய குற்றங்களை மறைத்துக் கொள்ள சம்பந்தமே இல்லாத புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார். தவிர இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளத்திலுள்ள எந்தவொறு பொதுமகனும் கலந்துகொள்ளவில்லை. புத்தளத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு அமைச்சர் றிசாத் பல அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கிறார். புத்தளத்திலுள்ள முஸ்லிம்கள் அமைச்சர் றிசாதிற்கு என்று நன்றியுயைவர்களாகவே இருப்பார்கள். இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்காளர்கள் பல்வேறு சதிகளை செய்து கொண்டிருக்கிhர்கள். இந்நிலையில் நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புன் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைச்சரை வஞ்சிப்பது அநியாயமாகும்" என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’