அவர் மேலும் தெரிவிக்கையில், இம்மாவட்டத்தில் ஒருகால கட்டத்தில் சமுர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற எண்ணம் அப்போதைய அரசிற்கு இருந்ததில்லை. இருந்த போதிலும் அரசுடன் கலந்துரையாடி நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று இம் மாவட்டத்திலும் சமூர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தோம்.
இதனூடாக யுத்த பாதிப்புக்களிலிருந்து எமது மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இந்நிலையில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் சமுர்த்தியை உள்ளடக்கியதாக பல்வேறு செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே யாழ்.மாவட்டத்தில் மட்டுமல்லாது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் சமுர்த்தி திட்டம் விரிவாக்கப்பட்டு வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஊடாக உதவித் திட்டங்களை வழங்க எமது அரசு தயாராகவுள்ளது.
வாழ்வின் எழுச்சி செயற்திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முற்பட்ட போதிலும் அரசு பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அதனை நிறைவேற்றி மக்களுக்கான பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றுள்ள அமைதிச் சூழலை குழப்பும் வகையில் சுயலாப அரசியல் வாதிகள் செயற்பட்டு வருகின்ற போதிலும் இது குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
ஊடகங்களில் செய்திகளுக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்களே தவிர மக்களுக்ககாக அவர்கள் எதையும் பெற்றுக் கொடுத்ததுமில்லை, கொடுக்கப் போவதுமில்லை யென்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே சமுர்த்தி திட்டத்திற்காக பல்வேறு வழிகளிலும் பங்காற்றிய அனைவருக்கும் அமைச்சர் அவர்கள் இதன்போது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’