இ லங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்படாமல் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை. தமிழ் மக்களின் தலைவர்களுடனும் தமிழக தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 'இலங்கையில் சாமானிய மக்கள் படும் துயரம் குறித்து நாம் கவலைக்கொண்டுள்ளோம். இலங்கை தமிழர் சுயமரியாதை, கௌரவத்துடன் வாழ்வதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்' என்றும் மன்மோகன் சிங் மேலும் கூறினார். -->













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’