மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் இந்த உறுதிமொழி சிரேஷ்ட அமைச்சர் பௌசியிடம் வழங்கப்பட்டுள்ளது. "சிறைச்சாலையின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே இந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டவிருந்தது. எனினும் எனது தலையீட்டை அடுத்து பள்ளிவாசல் உடைப்பு நிறுத்தப்பட்டுள்ளது" என சிரேஷ்ட அமைச்சர் பௌசி தெரிவித்தார்.இதற்கான உத்தரவுகள் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த பள்ளிவாசலின் செயற்பாடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நிறுத்தி விடுமாறு மஹர சிறைச்சாலை அத்தியட்சர் பள்ளிவாசல் பரிபாலன சபைக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா சந்திரசிறி கஜதீரவின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பிட்ட பள்ளிவாசல் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இப்பள்ளிவாசலில் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றி வரும் மஹர சிறைச்சாலை பிரதேசத்தைச் சேர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் உள்ள இந்த பள்ளிவாசல் 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த பள்ளிவாசலுக்கென பிரத்தியேகமாக பாதையொன்று அமைத்துத் தருவதாகவும் மதில் கட்டித் தருவதாகவும் உறுதியளித்திருந்த நிலையில் தற்போது பள்ளிவாசல் செயற்பாடுகளை நிறுத்தும் படி 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பள்ளிவாசல் பரிபாலன சபையினர் சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம்.பெளசி உட்பட முஸ்லிம் அமைச்சர்கள், வக்பு சபை அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோரை சந்தித்து தெரியப்படுத்தியுள்ளளனர். இதனையடுத்து புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுடன் சிரேஷ்ட அமைச்சர் பௌசி பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’