வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 மார்ச், 2013

சர்வதேசம் இலங்கையில் எதனை உருவாக்க முயற்சிக்கிறது?: டலஸ் கூறும் விளக்கம்



பிரிவினையை உருவாக்குவதற்கான புதிய உத்தியை சர்வதேச சமூகம் இலங்கையில் பரீட்சித்துப் பார்க்க முயற்சிப்பதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜெனிவா யோசனை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தும் வகையில் நேற்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை தொடர்பாக எடுக்கும் தீர்மானங்கள் இணைய நினைக்கும் இனங்களுக்கு இடையில், மீண்டும் இடைவெளிகளையும், கோபங்களையும் ஏற்படுத்தும். இலங்கை தொடர்பான மனித உரிமை பேரவையின் முடிவுகள் குறித்து கட்சி என்ற வகையில் சுதந்திரக்கட்சி கவலையடைகிறது. மனித உரிமை பேரவையானது நல்லெண்ணத்தில் கொட்டதை செய்யும் சர்வதேச நிறுவனமாகவே நாம் பார்க்கின்றோம். சுமார் 2500 ஆண்டுகள் மிகவும் சகோதரத்துடன் வாழ்ந்த இலங்கையில் 30 வருடங்கள் பகையுணர்வுகள் ஏற்பட்டன. எனினும் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், மீண்டும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பட்டது. தற்கொலைக் குண்டுதாரிகள் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை ருவான்டாவில் நடந்த மக்கள் படுகொலைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமற்றது என்று இலங்கை அரசாங்கத்தின் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’