ஐ .நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 204 பரிந்துரைகளில் 110 பரிந்துரைகளை ஏற்றுகொண்டுள்ளதாகவும் 91 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 3 பரிந்துரைகள் தொடர்பில் பரீசீலனைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் சீனா, ரஷ்யா உள்ளடங்களாக பல நாடுகள் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ள அதேவேளை, பிரிட்டன், மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் இலங்கையில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உடனடி சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு கூறியுள்ளன. ஜெனிவாவில் நடைபெற்றுகொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பிலான மீளாய்வின்போதே இத்தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இம் மீளாய்வின்போது, ஓமான், பாகிஸ்தான், வெனிசுலா, சூடான் ஐக்கிய அரபு இராஜ்ஜிம், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இலங்கையின் மனித உரிமை முன்னேற்றங்கள் தொடர்பில் தமது பாராட்டுகளை வழங்கியுள்ளன. இம்மீளாய்வின் போது, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை முன்னேற்றங்கள் தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளன. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’