வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஒவ்வொரு விடியலும் பயமாக இருக்கிறது பேரறிவாளனின் தாய்



ந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை கைதிகளுல் பேரறிவாளனும் ஒருவராவார். இவரை மீட்க அவரது தாய் அற்புதம்மாள் (66) பல்வேறு வகைகளில் போராடி வருகிறார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்த நிலையில் தனக்கு ஒவ்வொரு விடியலும் பயம் கலந்த நடுக்கத்தை அளிப்பதாகவும், ஒரு தாய்க்குதான் தனது துயரங்கள் புரியுமெனவும் அற்புதம்மாள உருக்கமாக கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதல்களில் ஈடுப்பட்ட அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குருவின் தூக்கு தண்டனை இரகசியமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தனக்கு ஏற்கனவே இருந்த பயம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையின் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனுக்கு நீதி வழங்கப்படுமென நம்புவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே 22 வருடங்கள் சிறையில் பேரறிவாளன அடைக்கபட்டிருந்தார். சிறையில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், அவர் சிறையில் உள்ள பிற கைதிகளின் வாழ்க்கையை சீர்திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த தாய் கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’