கிளிநொச்சியில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்மதி நெற்செய்கையின் அறுவடை விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பெறுமதியான சந்தைவாய்ப்பை இலக்காகக் கொண்டவையாகவே விவசாயச் செய்கைகள் அமைய வேண்டும். அத்தோடு; மாறிவரும் சீரற்ற காலநிலைக்கேற்ப மிகக்குறுகிய காலத்தில் பயனைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பயிர்களை நடுகை செய்வதும் இன்றைய சூழலில் அவசியமாகின்றது எனவே பாரம்பரிய பயிர்செய்கைமுறையிலிருந்து மாறி காலத்தின் தேவைக்கேற்ப அறிமுகப்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழலும் இன்று உருவாகியுள்ளது. எனவே அதற்கான வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கு விவசாயத்திணைக்களம் தயாராக உள்ளது. எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இன்று வாழ்வின் எழுச்சித்திட்டத்தினூடாக அதிக வருமானத்தினை பெறக்கூடிய வீட்டுத்தோட்டச் செய்கைக்கான விதைகளை அரசாங்கம் மக்களுக்கு விநியோகித்து வருகின்றது.
இவற்றினூடக குறைந்த உற்பத்திச் செலவில் அதிக வருமானத்தினை பெற்றுக் கொள்ளமுடியும். அத்தோடு மனிதனுக்கு நிறைவான தேக ஆரோக்கியத்தை வழங்குகின்ற இயற்கை உரப்பாவனைகளை மட்டும் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கும் இன்று அதிக சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர் இன்று பாலைவனத்தின் மத்தியில் தொழில்நுட்பத்ததை பயன்படுத்தி விவசாய உற்பத்தியில் ஈடுபடும் இஸ்ரேல் போன்ற நாடுகள் உலகச்சந்தையில் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதில் முதல்தரத்தில் திகழ்கின்றன எனவே தாராளமான நிலப்பரப்பையும் வளமான மண்வளத்தையும் கொண்ட எமது பிரதேச விவசாயச் செய்கைகளும் சர்வதேசசந்தையை இலக்காகக் கொண்டதாக அமைய வேண்டும். கடந்த காலங்களில் அதற்கான சாதகத்தன்மை காணப்படாதபோதும் இன்று அதற்கு ஏதுவான நிலைமைகள் உருவாகியுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஏற்றுமதி வர்த்தகத்தை இலக்காகக் கொண்ட பாசுமதி எனும் நெல் இனத்தை கிளிநொச்சி மண்ணிலும் பயிரிட முடியும் என்பதை தனது முயற்சியினூடாக வெளிப்படுத்தியுள்ள விவசாயி சிவகுமாரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்நெல்லினத்தை நெல் ஆராட்சி நிலையத்தினர் ஆய்வுக்குட்படுத்தி அங்கீகரிக்க வேண்டும் ஏனெனில் சட்டரீதியான அங்கீகாரத்தினை பெறுவதனூடாகவே இவ் இனத்தை பயிரிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் கிடைக்கும். இருப்பினும் இவ்வாறான முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட முன்வரவேண்டும். ஏனெனில் அதிக சந்தைவாய்ப்பை பெறக்கூடிய இனமாக இது காணப்படுவதால் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு செயற்படும் எமது விவசாயிகளுக்கு இவ்வாறான நெல் இனங்கள் அதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும். அத்தோடு யுத்த அழிவைச் சந்தித்த எம்மக்கள் தொடர்ந்தும் இயற்கை அழிவுகளையும் எதிர்கொண்டு வருவதனால் அவர்கள் பாரியபொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனவே அதிக பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இவ்வாறான முயற்சிகளை நாம் விரும்பி வரவேற்கின்றோம். இவ்வாறான முயற்சிகளில் மேட்டுநிலப் பயிர்செய்கையாளர்களும் ஈடுபடவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் தனது காணியை அன்பளிப்பு செய்த ஆனந்தகுமாரராசா விற்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் பசுமைத்தாயகம் எனும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவ்அமைப்பின் தலைவர் விவசாயி சகாதேவனின் 16 வருட திறந்த வெளி ஆய்வு முயற்சியின் பயனாக விவசாயி சிவகுமாரால் பயிரிடப்பட்டு நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்புடையது என இனம்காணப்பட்ட பாஸ்மதி எனும் நெல்லினம் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களினால் இன்று அறுவடை செய்யப்பட்டு ஏனைய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்தோடு சுமார் 25 விவசாயிகளுக்கு இவ் நெல்லினம் பயிரிடுவதற்காக இலவசமாகவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது விவசாயி ஆனந்தகுமாரராசா அவர்களால் தனது சொந்தக்காணியிலிருந்து கால் ஏக்கர் பகுதியை விவசாயி மூர்த்திக்கும் கால்ஏக்கரை கிளிநொச்சி மகிழங்காடு திட்டக்குழவிற்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய பிதா கான்ஸ்போவர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகேதீஸ்வரன், விவசாயத் திணைக்களப்பணிப்பாளர் செல்வராசா,பிரதேச அபிவிருத்தி வங்கிமுகாமையாளர் சற்குணபாலன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன்,போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன் கிளிநொச்சி வர்த்தகசங்கத்தலைவர் இரத்தினமணி, ஆகியோரும் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் திட்டக்குழுக்களின் பிரதிநிதிகள் பொதுஅமைப்புக்களின் உறுப்பினர்கள் அரச திணைக்களங்களின் அலுவலர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’